மறைந்த பின்னரும் சாதனை படைத்த சுஷாந்த் சிங் படம்

Sushant Singh Rajput's Dil Bechara trailer has an astonish 4.3 million likes on YouTube in less than 24 hours, more than the trailers of two of all-time biggest blockbusters Infinity War and Endgame.

0
139

மறைந்த பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத், டி.வி சீரியலில் நடித்து அதன் மூலம் பாலிவுட்டுக்கு அறிமுகமாகி மிகவும் குறுகிய காலத்தில் தனக்கென தனி இடம் பிடித்திருந்தார். 

திரைத்துறையில் வளர்ந்து வரும் நடிகராக இருந்த சுஷாந்துக்கு அவரது சொந்த வாழ்க்கையில் பல்வேறு பிரச்னைகள் இருந்ததாகக் கூறபடுகிறது.

இதனால் கடுமையான மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால் வீட்டில் இருந்த சுஷாந்த் கடந்த ஜூன் 14-ம் தேதி மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள தன் வீட்டு அறையில் தற்கொலை செய்து கொண்டு மிகப் பெரும் அதிர்ச்சியை ரசிகர்கள் மத்தியில் ஏற்படித்தினார்.

இந்நிலையில், இந்நிலையில் முகேஷ் சாப்ரா இயக்கத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத், நடித்த கடைசி படமான `தில் பெச்சாரா’ படத்தின் டிரைலர் நேற்று(திங்கள்கிழமை)  யு டியுப் தளத்தில் வெளியாகி அவரது ரசிகர்களை கலங்க வைத்துள்ளது.

அவர் கடைசியாக நடித்த தில் பேச்சரா ஹிந்திப் படம் ஜுலை 24 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. டிரைலர் வெளியான 24 மணி நேரத்திற்குள்ளாகவே அதிக லைக்குகளைப் பெற்று புதிய உலக சாதனையைப் படைத்துள்ளது.

இதற்கு முன்பு யு டியுபில் வெளியான சினிமா டிரைலர்களில் ஹாலிவுட் படங்களான அவஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் டிரைலர் மொத்தமாக 3.6 மில்லியன் லைக்குகளைப் பெற்று முதலிடத்தில் இருந்தது. அந்த சாதனையை 24 மணி நேரத்திற்குள்ளாகவே தில் பேச்சரா டிரைலர் முறியடித்துள்ளது.

தற்போது வரை தில் பேச்சரா டிரைலர் 4.7 மில்லியன் லைக்குகளுடன் 2 கோடிக்கும் அதிகமான பார்வைகளுடன் உள்ளது. நேற்று டிரைலர் வெளியான போதே ரசிகர்கள் இந்த டிரைலரை மிகப் பெரும் சாதனை புரிய வைக்க வேண்டும் என கமெண்ட்டுகளில் பகிர்ந்து வந்தனர். அதன்படியே தற்போது செய்து வருகின்றனர்.

தில் பெச்சாரே படத்தின் ட்ரைலரில் வரும் ‘ நம் பிறப்பு அல்லது இறப்பு நேரத்தை நம்மால் தீர்மானிக்க முடியாது, ஆனால் வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டும் என்பதை நாம் தீர்மானிக்க முடியும்’ என்ற வசனமும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மறைந்தும் சாதனை படைத்து விட்டார் சுஷாந்த் சிங்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here