மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவை உரிமக் கட்டணம் தொடர்பாக அளிக்கப்பட்ட தீர்ப்பின் சில அம்சங்களை மறு ஆய்வு செய்யக் கோரி தொலைத் தொடர்பு நிறுவனங்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பார்தி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களிடம் இருந்து 92 ஆயிரம் கோடி ரூபாய் நிலுவை உரிமக் கட்டணத்தை மத்திய அரசு வசூலிக்க அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

தொலைத் தொடர்பு நிறுவனங்களின் மொத்த வருவாயைக் கணக்கிடுவதற்கான மத்திய அரசின் வரையறை, நிலுவைக் கட்டணத்தின் மீதான வட்டி, அபராதம் ஆகியவற்றையும் நீதிபதிகள் உறுதி செய்தனர்.

இந்நிலையில், இந்த தீர்ப்பின் சில அம்சங்களை மறுஆய்வு செய்யுமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கேட்டுக் கொண்டுள்ளன.

நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள்  நிலுவைத் தொகையை செலுத்த காலஅவகாசம் வழங்கியது குறிப்பிடத்தக்கது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here