மருந்து தொழிற்சாலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு; இருதரப்பு மோதல்

0
145

புதுச்சேரியில் கருத்துக்கேட்பு கூட்டத்தில் இருபிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து மோதலை தடுக்க தடியடி நடத்திய போலீஸார், கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர்.

காலாப்பட்டு மருந்து தொழிற்சாலை விரிவாக்கம் தொடர்பாக, ஆட்சியர் தலைமையில் மக்களின் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. இதில், தொழிற்சாலையின் விரிவாக்கத்திற்கு ஆதரவாக ஒரு தரப்பினரும், எதிராக பொதுமக்களும் கருத்து தெரிவித்தனர். புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு அமைப்பு , தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல்துறை ஆகியவை இணைந்து கருத்துக் கேட்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.

கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் தனியார் நிறுவன அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையே கடும் வாக்குவாதம்
ஏற்பட்டது. கூட்டத்தை நடத்துவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.மாவட்ட ஆட்சியர் துர்ஷாவத் கூட்டத்தை ஒத்திவைத்துக் கிளம்பினார். பொதுமக்கள் அவரது காரினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களை அப்புறப்படுத்தினர்.

மீண்டும் இருதரப்பினரும் மோதலில் ஈடுபட்டதைத் தொடர்ந்து போலீஸார் தடியடி நடத்தினர். மேலும், 10-க்கும் மேற்பட்ட கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தைக் கலைத்ததால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

இருதரப்பினரும் மோதலில் ஈடுபட்டதைத் தொடர்ந்து கூட்டத்தைக் கலைக்க கண்ணீர் புகைக் குண்டு பயன்படுத்தப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் மக்களின் கருத்து கேட்பு கூட்டம் மாலை 4 மணிக்கு மீண்டும் நடக்கும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

இதையும் படியுங்கள்: “பாஸ்வேர்டை மாற்றுங்கள்” – பயனர்களுக்கு டிவிட்டர் எச்சரிக்கை

இதையும் படியுங்கள்: #BanSterlite: “மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை மூடிட்டுப் போக வேண்டியதுதானே”

இதையும் படியுங்கள்: மக்களின் வரிப்பணம் 198 கோடி ரூபாய் வீண்; 580 கேள்விகளில் 17 கேள்விகளுக்கு மட்டுமே பதில்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்