ஒடிசாவில் கொரோனா தடுப்பு பணியின்போது மருத்துவ பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டால், அவர்களின் குடும்பத்தினருக்கு தலா 50 லட்சம் ரூபாய் நிதி அளிக்கப்படும், உயிரிழந்தோரின் சடலங்களுக்கு அரசு மரியாதையுடன் இறுதிசடங்கு நடத்தப்படும் என முதமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்களை தியாகிகளாக கருதி இறுதிச்சடங்கு நடத்தப்படும் என கூறினார். சீனாவில் முதன் முதலாக பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,601 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் இதுவரை 590 பேர் உயிரிழந்த நிலையில், 3252 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் ஒடிசாவில் கொரோனா தடுப்பு பணியின்போது மருத்துவ பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டால், அவர்களின் குடும்பத்தினருக்கு தலா 50 லட்சம் ரூபாய் நிதி அளிக்கப்படும் என ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளரிடம் பேசிய அவர், மருத்துவ பணியாளர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலோ, அவர்களின் பணியை அவமதிக்கும் வகையிலோ யாரேனும் செயல்பட்டால், தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

கொரோனா தடுப்பு பணியின்போது மருத்துவ பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டால், அவர்கள் தியாகிகளாக கருதப்பட்டு, அரசு மரியாதையுடன் சடலங்களுக்கு இறுதி சடங்கு நடத்தப்படும் என கூறியுள்ளார். அவர்களின் ஈடு இணையற்ற தியாகத்தை கெளரவிக்கும் வகையில், விருதுகள் அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here