மருத்துவர்கள் வேலை நிறுத்தம் : ஒழுங்கு நடவடிக்கை நோட்டீசுக்கு உயர்நீதிமன்றம் தடை

0
105

வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை நோட்டீசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு மருத்துவர்களில் ஒரு பிரிவினர் கடந்த 25 ஆம் தேதி முதல் ஐந்து நாட்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களுக்கு  சார்ஜ் மெமோ எனப்படும் துறை ரீதியான  ஒழுங்கு நடவடிக்கை நோட்டீஸும் பணிமாறுதல் உத்தரவுகளும் வழங்கப்பட்டு வருகிறது.

இதை எதிர்த்து, போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணி, ஒழுங்கு நடவடிக்கை நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

அரசின் பணியிட மாறுதல் குறித்து  எந்த உத்தரவும் பிறப்பிக்காத நீதிபதி, வழக்கு குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலர் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு  விசாரணையை 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here