மருத்துவ படிப்பில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான 85 சதவிகித இடஒதுக்கீடு செய்து வெளியிடப்பட்ட தமிழக அரசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வு (National Eligibility and Entrance Test – NEET) இந்தாண்டு நாடு முழுவதும் மத்திய அரசு நடத்தியது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின.தமிழகத்தில் மட்டும் 85 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதியிருந்த இத்தேர்வில் 38 சதவிகித மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றிருந்தனர்.

இதனிடையே மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான 85 சதவிகித இடஒதுக்கீடு ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கான அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டது. இந்த அரசாணையை எதிர்த்து சிபிஎஸ்இ மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான 85 சதவிகித இடஒதுக்கீடு அரசாரணையை ரத்து செய்தும், புதிய தரவரிசைப் பட்டியலைத் தயார் செய்து கலந்தாய்வு நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், தனி நீதிபதி வழங்கிய இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

அப்போது, மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான 85 சதவிகித இடஒதுக்கீடு அரசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், புதிய தரவரிசைப் பட்டியலைத் தயார் செய்து கலந்தாய்வு நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்முறையீடு செய்யப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.

இதையும் படியுங்கள் : “ஆடைத் தயாரிப்பிலுள்ள பெண்கள் ஒற்றுமையால் ஜெயித்தார்கள்”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்