இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை எப்படி ஏற்படுத்திக் கொடுக்கப் போகிறீர்கள் என்பது பற்றி மன்கிபாத் நிகழ்ச்சியில் பேசுங்கள் என பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின், இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் மன்-கி-பாத் என்னும் நிகழ்ச்சி மூலம் தொடர்ந்து மக்களுடன் பேசி வருகிறார். அதன்படி, இந்த வருடத்தின் முதல் மன்கிபாத் நிகழ்ச்சியில் (ஜன.28), என்ன பேச வேண்டும் என்பதற்கான கோரிக்கைகளையும், யோசனைகளையும் தனக்கு தெரியப்படுத்துங்கள் என பிரதமர் மோடி, மக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை ஏற்படுத்துவதற்காகவும், இந்திய எல்லையிலுள்ள டோக்லாமிலிருந்து சீனப்படைகளை வெளியேற்றுவதற்காகவும், அரியானாவில் பெண்ளுக்கெதிரான குற்றங்களைத் தடுப்பதற்காகவும் என்ன திட்டங்கள் வைத்துள்ளீர்கள் என்பதைத் தெரியப்படுத்துங்கள் என பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்: நீங்கள் யாரையாவது சார்ந்து இருப்பவரா? இதைப் பாருங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here