மன்மோகன் சிங் போல படித்த பிரதமர் தற்போது இல்லை – அர்விந்த் கெஜ்ரிவால்

0
388

டாக்டர் மன்மோகன் சிங் போல படித்த பிரதமர் தற்போது இல்லை என்று பிரதமர் மோடியை மறைமுகமாக விமர்சித்து டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

2016-ஆம் ஆண்டு பிரதமர் மோடி பெற்ற கல்லூரி பட்டங்கள் பற்றி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய தகவல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பி இருந்தார். இதையடுத்து பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோர் மோடியின் பட்டங்களை வெளியிட்டனர். ஆனால் அதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் ஒன்றுக்கொன்று முரணாக உள்ளதாக கூறி அந்த சான்றிதழ்கள் பொய்யானவை என்றும் அர்விந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்திய ரூபாயின் மதிப்பிழப்பு முதலீடுகளில் எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தும் என்று இந்திய பொருளாதாரம் சார்ந்த Wall Street journal இல் வெளியான ஒரு கட்டுரையை தனது டிவிட்டர் பக்கத்தில் கெஜ்ரிவால் பகிர்ந்துள்ளார்.
அந்தக் கட்டுரையின் google bitly இதுதான் – https://goo.gl/JHbYih

அந்தக் கட்டுரையை குறிப்பிட்டுவிட்டு “மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது பிரதமராக இருந்த டாக்டர் மன்மோகன் சிங் போல படித்த பிரதமர் தற்போது இல்லை. தங்களுக்கு படித்த பிரதமர்கள் வேண்டும் என்பதை இப்போதுதான் மக்கள் உணரத் துவங்கியிருக்கிறார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here