மன்மோகன் சிங் ஆட்சியில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதை விட, மேக் இன் இந்தியா என்ற பாஜக அதிக அளவில் இறக்குமதி செய்துள்ளது ; ராகுல் காந்தி

Rahul Gandhi tweets chart to illustrate rise in Chinese imports since 2014 This also comes a day after the Centre banned 59 Chinese apps to send a strong signal to the neighbouring country amid the Galwan faceoff.

0
219

மன்மோகன் சிங் ஆட்சியில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை விட, மேக் இன் இந்தியா என்ற பாஜக அரசு அதிக அளவில் சீன பொருட்கள் இறக்குமதி செய்துள்ளது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். 

சீன தயாரிப்புகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என வலுயுறுத்திவிட்டு, அரசே அதிகளவு பொருட்களை சீனாவில் இருந்து தான் இறக்குமதி செய்கிறது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

கிழக்கு லடாக்கில் கல்வானில் உள்ள உண்மை கட்டுப்பாட்டுக் கோடு (LAC) தொடர்பாக இந்தியா-சீனா பிரச்சனைகள் நடந்து வரும் நிலையில், சீனாவிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்வது தொடர்பாக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  ஆளும் பாஜக மீது குற்றம்சாட்டியுள்ளார். 

காங்கிரஸ் தலைமையிலான UPA அரசாங்கத்தின் போது சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை விட, ஆளும் பாஜக அரசின் போது தான் (இந்தியா-சீனா தகராறின் போது) அதிக அளவில் சீன பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பான ஒரு விளக்கப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

மேக் இன் இந்தியா என்று கூறிக்கொண்டிருக்கும் பாஜக அரசு தான் அதிகமாக சீன பொருட்களை இறக்குமதி செய்வதாக காட்டுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

ராகுல் காந்தி பகிர்ந்துகொண்ட வரைபடத்தின் படி, ‘2009 மற்றும் 2014-க்கு இடையில், சீனாவிலிருந்து மொத்த இறக்குமதி 14 சதவீதமாக இருந்துள்ளது. அதே நேரத்தில் மோடி அரசு இந்த புள்ளியை அதிகபட்சம் 18 சதவீதம் வரை கொண்டு சென்றுள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here