முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியின்போதுதான் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் முன்னெப்போதும் இல்லாத வகையில் 10.08 சதவீதமாக உயர்ந்ததாக தேசிய புள்ளியியல் ஆணையம் மூலமாக அமைக்கப்பட்ட சிறப்பு குழு இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது.

அவ்வாறு உயர்ந்தது தாராளமயக் கொள்கை அமல்படுத்தப்பட்ட பிறகு எட்டப்பட்ட உச்ச அளவு எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

* 1991-ஆம் ஆண்டு மறைந்த நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது தாராளமயக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்டன. அதற்கு அடுத்த ஆண்டுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் கணக்கிடப்பட்டது.

* அதிகபட்சமாக 2006-07 நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 10.08 சதவீதமாக இருந்தது.

*தாராளமயக் கொள்கைக்கு முன்னதாக எடுத்துக் கொண்டால் 1988 – 89 காலகட்டத்தில் (ராஜீவ் காந்தி ஆட்சி) அந்த மதிப்பு அதிகபட்சமாக 10.2 சதவீதம் இருந்தது என்று

மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சக வலைதளப் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

இந்த புள்ளிவிவரம் குறித்து காங்கிரஸ் கட்சி தனது டிவிட்டர் பக்கத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்பான உண்மை தற்போது வெளியாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேலும், 10 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் சராசரி பொருளாதார வளர்ச்சி 8.1 சதவீதம் இருந்ததாகவும், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் அந்த விகிதம் 7.3 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் அக்கட்சி விமர்சித்துள்ளது.

(இந்தச் செய்தி பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது )

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here