ஏர் இந்தியா பணியாளரைச் செருப்பால் அடித்த சம்பவம் தொடர்பாக சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட் மன்னிப்பு கோரினார்.

இதையும் படியுங்கள் : இந்தியர்களுக்கு அடி மேல் அடி; பிரிட்டன் விசாக் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது

கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஏர் இந்தியா பணியாளர் மற்றும் சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட் ஆகிய இருவருக்குமிடையே பிசினஸ் கிளாஸில் இருக்கை ஒதுக்காதது குறித்து வாக்குவதம் நடந்துள்ளது. அப்போது ஏர் இந்தியா பணியாளர், பிசினஸ் கிளாஸில் இடம் இல்லாததால் தங்களால் ஒதுக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார். ஆனால் வாக்குவாதத்தின்போதே கெய்க்காட், பணியாளரின் கன்னத்தில் செருப்பால் அறைந்தார். இந்தச் சம்பவத்தால் விமான ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து, விமான நிறுவனங்களும், கெய்க்வாட் விமானங்களில் பயணிக்க அனுமதி மறுத்துவிட்டன. இந்நிலையில், வியாழக்கிழமை நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடரின்போது, இந்தச் சம்பவத்துக்காக மன்னிப்புக் கோரினார். இதன் பின்னர் அவர், ”தென் ஆப்பிரிக்காவில் மகாத்மா காந்தி ரயிலில் இருந்து வெளியே தள்ளப்பட்டார். நரேந்திர மோடிக்கு நீண்ட காலமாக அமெரிக்க விசா வழங்க மறுத்தது. இதேபோலதான் நானும் விமானங்களில் பயணிக்க அனுமதிக்கப்படாமல் இருக்கிறேன்” என்றார்.

இதையும் படியுங்கள் : வெயில் காலத்துக்கு செலவே இல்லாத இந்த 4 வகையான தண்ணீரை அருந்துங்கள்

மேலும் அவர், ஏர் இந்தியா பணியாளர் என்னிடம் வந்து நீங்கள் யார் என்றார்?. அதற்கு நான் ஒரு எம்.பி. என்றேன். அதற்கு அந்த பணியாளர், அதனால் என்ன? நீங்கள் என்ன நரேந்திர மோடியா?” எனக் கேட்டதாகவும் கூறினார்.

இதையும் படியுங்கள் : கமல்ஹாசனை போல ஒரு கோபக்காரரை நான் பார்த்ததேயில்லை – ரஜினி பேச்சு

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்