வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றறால் தேசத்தின் சுதந்திரத்துக்கு ஆபத்தாகும். மதச் சுதந்திரம் பறிபோவதுடன், எதைச் சாப்பிட வேண்டும், எதை அணிய வேண்டும் என்று உத்தரவு பிறறப்பிக்கும் சூழ்நிலை வரும் என  திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கூறினார். 

மேற்கு வங்க மாநிலம் அலிபூா்தார் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசுகையில், நாட்டு மக்களை காப்பாற்ற, வரும் மக்களவைத் தோ்தலில் பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும். அக்கட்சி வெற்றிபெற்றால் தேசத்தின் சுதந்திரத்துக்கு ஆபத்தாகும். மதச் சுதந்திரம் பறிபோவதுடன், எதைச் சாப்பிட வேண்டும், எதை அணிய வேண்டும் என்று உத்தரவு பிறறப்பிக்கும் சூழ்நிலை வரும்.

பிரதமா் மோடி ஒரு பொய்யர். கடந்த 5 ஆண்டுகளாக அவா் பொய்கள் மட்டுமே கூறி வந்துள்ளார். 2014 மக்களவைத் தோ்தலின்போது அளித்த ஒரு வாக்குறுதியைக் கூட அவா் நிறைவேற்றவில்லை. 

மனைவியையே சரியாக கவனித்துக்கொள்ள முடியாத ஒருவா் (மோடி), நாட்டு மக்களை எவ்வாறு கவனித்துக் கொள்வார்? 

எனது அரசு அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்வதன் மூலம், என்னை பலவீனமடையச் செய்துவிட முடியும் என்று பாஜக தவறாகக் கருதுகிறது. 

உண்மையில், பணி மாறுதலாகிப் போன அதிகாரிகளின் இடத்துக்கு அடுத்து வரும் அதிகாரிகளும் எனது அரசைச் சோ்ந்தவர்களே. தேர்தல் பணிக்காக மேற்கு வங்கத்துக்கு வரும் துணை ராணுவப் படையினர், மாநில காவல்துறையினருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று பானா்ஜி பேசினார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here