மனிதாபிமான நெருக்கடிகளை இந்திய அரசு நிறுத்த வேண்டும் – காஷ்மீர் செல்ல அனுமதி கேட்ட அமெரிக்க செனட் சபையின் முக்கிய உறுப்பினர்

0
555

ஜம்மு -காஷ்மீரில் தற்போது இருக்கும் சூழ்நிலை இந்திய மக்கள் அனைவரும் அறிந்த ஒன்றே. காஷ்மீரில் உண்மையில் என்ன நடக்கிறது? என்பதை தெரிந்துக் கொள்ள இந்தியாவில் இருந்தும் பல அரசியல் தலைவர்கள் காஷ்மீர் செல்ல முயற்சி  செய்த போதெல்லாம் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

 காஷ்மீர் சென்று அங்கு இருக்கும் நிலைமையை முதன்முதலில் நேரில் பார்வையிட விரும்பிய அமெரிக்க செனட் சபையின் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் கிரிஸ் வான் ஹோலன் – க்கும் இந்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. ஆகஸ்ட் 5 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது . அதனைத் தொடர்ந்து மக்கள் ஜம்மு காஷ்மீரின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி  வருகிறார்கள். 

கராச்சியில் பிறந்து கொடைக்கானலில் பள்ளிப்படிப்பை தொடர்ந்த ஹோலனின் தந்தை இலங்கையில் அமெரிக்க தூதராக பணியாற்றினார். எனவே ஹோலனுக்கு இந்திய அரசியலமைப்பு பற்றி அனைத்தும்  தெரியும். அவருக்கும் இந்திய அரசியலுக்கும் நிறையவே தொடர்பு இருக்கிறது. காஷ்மீர் செல்ல ஹோலனுக்கு அனுமதி மறுக்கப்பட்ட போதிலும் கடந்த வியாக்கிழமை இந்தியா வந்த் கிரிஸ் வான் டெல்லியில் சில முக்கிய அதிகாரிகள் உறுப்பினர்களை சந்தித்தார். அதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை ஹோலன்  இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்தார்.

பேட்டியில் அவர் பேசியிருப்பதாவது, “என்ன நடக்கிறது என்பதை முதலில் காண நான் காஷ்மீருக்குச் செல்ல விரும்பினேன், ஆனால் இந்திய அரசாங்கத்தால் அனுமதி மறுக்கப்பட்டது. நாங்கள் ஒரு வாரத்திற்கு முன்பு அரசாங்கத்தை அணுகியிருந்தோம், ஆனால் அங்கு செல்ல இது சரியான நேரம் அல்ல என காரணம் கூறி அனுமதி தரபடவில்லை.

இந்தியா முழுவதும் பயணம் செய்த என்னால் ஜம்மு காஷ்மீர் செல்ல முடியவில்லை. அங்கு சென்று நிலைமையை நானே பார்ப்பது பயனுள்ளதாக இருக்கும் என்று நான் நினைத்தேன். எனது தனிப்பட்ட பார்வை என்னவென்றால், அரசாங்கத்திற்கு அங்கு என்ன நடக்கிறது என்பதை  மறைக்க எதுவும் இல்லை என்றால், மாநிலத்திற்கு பார்வையாளர்களை பயப்படாமல் அனுமதிமதிக்கலாமே . அங்கு என்ன நடக்கிறது என்பதை நாங்கள் பார்க்க இந்திய அரசு விரும்பவில்லை என்று மட்டுமே தெரிகிறது.

இது குறித்து இந்திய அரசிடமிருந்து அதிகாரபூர்வ பதில் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும், வெளிநாட்டு பிரமுகர்கள் தங்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அங்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அரசு  தெரிவித்துள்ளது .

எனக்கு இந்தியா மீது ஆழ்ந்த பாசம் உள்ளது, மேலும் வலுவான இந்திய-அமெரிக்க உறவுகளை ஆதரிக்கிறேன்” என்று கூறினார்.

வான் ஹோலன் 2017 முதல் 2019 வரை அமெரிக்க செனட் சபையின் பிரச்சாரக் குழுவின் தலைவராக பணியாற்றியுள்ளார். மேரிலாந்தின் 8 வது காங்கிரஸின் மாவட்டத்திற்கான அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உறுப்பினராகவும் திகழ்கிறார். அவரது தொகுதி, மேரிலாந்து. இங்கு தான் அதிகப்படியான இந்திய மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த அமெரிக்க வாழ் முஸ்லிம்கள் உள்ளனர். 

 காஷ்மீரில் நிலவும் மனிதாபிமான நெருக்கடிகளை தீர்க்கவும், தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதை உடனடியாக திரும்ப பெறவும் இந்தியாவிடம் வலியுறுத்தியுள்ளதாக  வெளிநாட்டு உறவுகள் தொடர்பான அமெரிக்க செனட் குழு  வெளியிட்ட  அறிக்கை கூறுகிறது .

 மூத்த செனட்டரும், குடியரசு கட்சியின் முக்கிய தலைவரும், அதிபர் டொனால்டு டிரம்புக்கு மிகவும் நெருக்கமானவருமான லிண்ட்சே கிரஹாமிடம் இந்த அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது .  ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கவும், தடை உத்தரவுகளை ரத்து செய்யவும், துண்டிக்கப்பட்ட தொலைத் தொடர்புகளை மீண்டும் இணைக்கவும், காஷ்மீரில் நடக்கும் மனிதாபிமான நெருக்கடிகளை சரிசெய்யவும் இந்த அறிக்கை கூறுகிறது. 

இந்த அறிக்கை இரு கட்சி குழுவால் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளபட்டிருக்கிறது .  காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுதலை   செனட் குழு கூர்ந்து கவனிக்கிறது அதனால் இந்தியா  நிலைமையை சரி செய்ய வேண்டும் என்றும் வேன் ஹாலன் தி இந்து நாளிதளிடம் கூறியுள்ளார்.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here