1969 ஜூலை 20 ஆம் தேதி மனிதன் நிலவில் கால்வைத்த மாபெரும் அறிவியல் தொழில்நுட்ப சாதனை நிகழ்ந்த நாள்.
ஆனால் அது நம்முடைய தினசரி வாழ்வைப் பாதித்த முக்கியமான மைல்கல்லாகவும் உள்ளது.
இன்றைய பண மதிப்பில் 200 பில்லியன் டாலர்கள் செலவில் முன்னெடுக்கப்பட்ட அப்போலோ செயல்திட்டம், நீங்கள் ஒருபோதும் அறிந்திராத துறைகளில் ஆச்சரியம் ஏற்படுத்தும் முன்னேற்றங்களையும் தொடங்கி வைத்தது.
அவற்றில் சிலவற்றை இங்கு நாம் காண்போம்.
1. சுத்தம் செய்வதில் குறைந்த சிக்கல்கள்
வயர் இல்லாத மின்சார உபகரணங்கள் அப்போலோ விண்கலப் பயணத்திலேயே பயன்படுத்தப்பட்டன. ஆனால் இன்றைக்கு நாம் அறிந்திருக்கும் பொருட்களை உருவாக்குவதில் அவை உண்மையில் உதவிகரமாக இருக்கின்றன.
உதாரணமாக, மின்சார உபகரணங்கள் தயாரிக்கும் பிளாக் & டெக்கர் என்ற அமெரிக்க நிறுவனம் “வயர் இல்லாத” துளையிடும் கருவியை 1961ல் அறிமுகம் செய்தது.
ஆனால் அதே நிறுவனம் செயற்கைக்கோளில் இருந்து முக்கிய சாம்பிளை எடுக்க விசேஷ துளையிடும் கருவியை நாசாவுக்கு வழங்கியது. என்ஜின் மற்றும் பேட்டரிகள் உருவாக்கப்பட்டதால் கிடைத்த அறிவு, புதிய வகையிலான வீட்டு உபயோகப் பொருட்களைத் தயாரிக்க பிளாக் & டெக்கர் நிறுவனத்துக்கு உதவிகரமாக இருந்தது. வயர் இல்லாத வர்த்தக ரீதியிலான, தரையை சுத்தம் செய்யும் கருவியை 1979ல் அறிமுகம் செய்ததும் இதில் அடங்கும்.
குப்பையை சுத்தம் செய்யும் இந்தக் கருவி 30 ஆண்டுகளில் 150 மில்லியன் எண்ணிக்கை அளவுக்கு விற்பனை ஆகியுள்ளது.
2. நேரத்தைப் பின்பற்றுவதில் மேம்பாடு
நிலவில் கால் பதிப்பதற்கு துல்லியமும் மிகவும் முக்கியமானதாக இருந்தது. ஒரு நொடியில் இம்மி பிசகினாலும் விண்வெளி வீரர்களுக்கு வாழ்வா, சாவா என்ற நிலை ஏற்பட்டிருக்கும்.
எனவே, இந்த லட்சியப் பயணத்தின் கட்டுப்பாட்டில் மிகவும் துல்லியமான கடிகாரங்கள் நாசாவுக்குத் தேவைப்பட்டன. குவார்ட்ஸ் கடிகாரங்கள் மூலம் அதற்கான தீர்வு கிடைத்தது.
முரண்பாடாக, அப்போலோ 11 லட்சியப் பயணத்தில் ஆம்ஸ்டிராங்கும், அவருடன் நிலவில் நடந்த பஸ் ஆல்டிரினும் அணிந்திருந்தவை மெக்கானிக்கல் கைக்கடிகாரங்கள்.
3. சுத்தமான தண்ணீர்
அப்போலோ விண்கலத்தில் பயன்படுத்தப்பட்ட, நீரை சுத்தம் செய்யும் தொழில்நுட்பம் இப்போது பாக்டீரியாக்கள், வைரஸ்களைக் கொல்லவும், நீர்நிலைகளில் பாசிகளை அகற்றவும் பல வகைகளில் பயன்படுத்தப் படுகிறது.
சில்வர் அயன்களின் அடிப்படையில், குளோரின் அல்லாத தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் செயல் திட்டத்தின் முன்னோடியாக அது அமைந்தது.
இப்போதும் அந்தத் தொழில்நுட்பம் நீச்சல் குளங்களிலும், செயற்கை நீருற்றுகளிலும் உலகெங்கும் பயன்படுத்தப் படுகிறது.
4. அதிக காலம் உழைக்கக் கூடிய ஷூ க்கள் கிடைத்திருக்கின்றன.
நிலவில் நடந்தபோது பாதுகாப்பு கிடைப்பதற்காக அப்போலோ விண்கலத்தில் சென்ற விண்வெளி வீரர்கள் பயன்படுத்திய 1965 ஆம் ஆண்டு மாடலில் உள்ள உடைகளையே விண்வெளி வீரர்கள் இப்போதும் அணிகிறார்கள்.
ஆனால், ஷூ தயாரிப்பில், நீடித்து உழைப்பதாகவும் அதிர்வை தாங்கிக் கொள்ளக் கூடியதாகவும் விளையாட்டு வீரர்களுக்கான ஷூக்கள் கடந்த சில தசாப்தங்களில் விற்பனைக்கு வந்திருக்கின்றன.
5. தீ பிடிக்காத துணிகள்
1967 ஆம் ஆண்டு அப்போலோ 11 பயிற்சியின் போது ஏற்பட்ட தீ விபத்தில், அதில் இருந்த மூன்று விண்வெளி வீரர்கள் மரணம் அடைந்த சம்பவம், அமெரிக்க விண்வெளி செயல் திட்டத்தை அதிர்ச்சியடையச் செய்துவிட்டது.
ஆனால், அதன் காரணமாக நாசா புதிய வகையிலான, தீப்பிடிக்காத துணியை தயாரித்தது. அது பூமியில் பரவலாகப் பயன்படுத்தப் படுகிறது.
சொல்லப் போனால், விண்வெளி வீரர்களுக்குப் புத்துணர்வு தருவதற்கான குளிரூட்டல் நடைமுறைகள் இப்போது திசுக்கள் கடினமாகிவிட்ட நோயாளிகள் உள்பட எல்லா வகை மக்களுக்கும் உதவியாக இருக்கின்றன – குதிரைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கின்றன.
6. உயிரைக் காக்கும் இருதய தொழில்நுட்பத்தில் உதவி
உடலில் பொருத்தக் கூடிய உதறல் நீக்கும் உபகரணங்கள், அபாயகரமாக அசாதாரண இருதய துடிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க தினசரி பயன்படுத்தப்படும் உபகரணங்கள் முதன்முறையாக உருவாக்கப்பட்டன. இதற்கு நாசாவின் சிறிய வடிவ மின்சுற்றமைப்புத் தொழில்நுட்பத்துக்கு நன்றி சொல்ல வேண்டும்.
அவசர நேரத்தில் பயன்படுத்தப்படும் உதறல் நீக்கி கருவிகளில் இருந்து மாறுபட்டு, சிறிய அளவிலான கருவிகள் நோயாளியின் தோலுக்கு அடியில் பதித்து, இருதயத் துடிப்பு கண்காணிக்கப் படுகிறது.
அசாதாரண நிலை ஏதும் இருந்தால் மின்சார தூண்டுதல்கள் மூலம் சரி செய்யப்படுகின்றன.
7. நமது மதிய உணவு குறைந்த அளவு
நிலவை அடைய வேண்டும் என்ற முனைப்பில் இருந்த நாசா, இடத்தை மிச்சப்படுத்துவதற்கான வழிகளை சிந்திக்க வேண்டியிருந்தது. முடிந்த வரையில் விண்கலத்தின்
எடையைக் குறைவாக வைத்திருக்க வேண்டியிருந்தது.
அதனால் அப்போலோ லட்சியத் திட்டங்களுக்கான உணவு பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ளப்ப்டது.
புதன் மற்றும் gemini -க்கான முந்தைய சிறிய பயணங்களுக்கு (1961 – 66) மாறாக நிலவுக்கான பயணம், விண்வெளியில் 13 நாட்களை எடுத்துக் கொண்டது.
உறை- உலர் நடைமுறையில் இதற்குத் தீர்வு கிடைத்தது. சமைத்த உணவுகளில் இருந்து நீர்ச்சத்தை குறைந்த வெப்ப நிலையில் பிரித்துவிடுவது- சாப்பிடுவதற்கு சுடுநீர் சேர்த்தால் போதும்.
அது நீல் ஆம்ஸ்டிராங்கிற்கு நல்லதாக இருந்தது. மலைப் பயணம் செல்பவர்கள் மற்றும் முகாம்களுக்குச் செல்லும் தலைமுறையினருக்கும் இது நல்லதாக அமைந்துவிட்டது. குறிப்பாக இது 4 டாலர் என்ற குறைந்த விலையில் கிடைக்கிறது.
8. உயிர்காக்கும் போர்வை
சூரியனின் வெப்பத்தில் இருந்து அப்போலோ நிலவு விண்கலத்தைக் காப்பதற்கு விண்வெளி நிறுவனம் பயன்படுத்திய பளபளப்பான இன்சுலேட்டருக்கு விண்வெளி போர்வை என பட்டப்பெயர் சூட்டினர்.
தகடு படலத்தால் பாதியளவுக்கு மூடியிருப்பதைப் போல விண்கலம் தோற்றம் அளித்தது. இப்போது நாம் காணும் உயிர்காக்கும் போர்வைகளைத் தயாரிப்பதற்கான உந்துதல் அதில் இருந்து தான் ஏற்பட்டது.
பிளாஸ்டிக், பிலிம் மற்றும் அலுமினியத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்ட விண்வெளி போர்வைகள் இப்போது விண்வெளி வீரர்களைவிட அதிகமானவர்களைக் காப்பாற்றுகின்றன.
அவசரகால தெர்மல் போர்வைகளை உருவாக்குவதற்கு நாசாவின் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. இவை மீட்பு மற்றும் மனிதாபிமான உதவிப் பணிகளில் பயனுள்ளதாக இருக்கின்றன.
நீண்ட தொலைவுக்கு ஓடுபவர்களுக்கு உடலில் வெப்பக் குறைபாடு ஏற்படாமல் இது கையடக்கமாக இருப்பதால், மராத்தான் நிகழ்வுகளின் போது இவை அதிகம் பயன்படுத்தப் படுகின்றன.
நோயாளிகள் மற்றும் அலுவலர்களின் உடல்நிலையை மேம்படுத்துவதற்கு, இந்த விண்வெளி தொழில்நுட்பத்தை மருத்துவமனைகளில் அடிக்கடி பயன்படுத்துகின்றனர்.
Courtesy: bbc