மத்திய பாஜக அமைச்சரின் கருத்துக்கு விஞ்ஞானிகளின் பதிலடி இது

Three Science Academies reject Union Minister Satyapal Singh's statement.

0
898

பரிணாம வளர்ச்சி: இந்தியாவின் மூன்று அறிவியல் சங்கங்களின் (இந்திய அறிவியல் சங்கம், தேசிய அறிவியல் சங்கம் மற்றும் இந்திய தேசிய அறிவியல் சங்கம்) அறிக்கை

நமது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் மாண்புமிகு சத்யபால் சிங் “எவரும், நம் முன்னோர்கள் உட்பட, ஒரு குரங்கு மனிதராக மாறுவதை எங்கும் சொல்லவோ அல்லது எழுதவோ இல்லை.டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு அறிவியலின்படி தவறு. இதைப் பள்ளி மற்றும் கல்லூரிப் பாடங்களிலிருந்து நீக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இந்தியாவின் மூன்று அறிவியல் சங்கங்களும் அமைச்சரின் இந்தக்கருத்துக்கு அறிவியல் அடிப்படை ஏதும் இல்லை என்று அறிவிக்கிறோம். பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு டார்வினின் மிக முக்கியமான பங்களிப்பால் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அறிவியலாளர்கள் இடையே இக்கோட்பாடைப்பற்றிக் கருத்து வேறுபாடு இல்லை. இது ஒரு அறிவியல் கோட்பாடு. இதன் அடிப்படையில் அனுமானிக்கப்பட்ட பலவும் பரிசோதனைகளில் நிரூபிக்கப்பட்டுள்ளன. இப்பரிமாண வளர்ச்சிக் கோட்பாட்டின் முக்கிய அம்சம் என்னவென்றால் இவ்வுலகில் காணப்படும் அனைத்து உயிரினங்களும், மனிதர்கள் மற்றும் குரங்குகள் உட்பட, ஒன்று அல்லது சில பொதுவான மூதாதையர்கள் வழியாக உருவானவை.

இந்தக்கோட்பாட்டைப் பள்ளி மற்றும் கல்லூரிப் பாடத்திட்டங்களிலிருந்து நீக்குவது மற்றும் இதற்கு மாற்றான அறிவியல் சாராத கட்டுக்கதை விளக்கங்களை இணைப்பது மிகவும் பிற்போக்கான செயல்.

சார்லஸ் டார்வினால் எடுத்துரைக்கப்பட்ட பரிமாண வளர்ச்சிக் கோட்பாடு மற்றும் இயற்கைத் தேர்வு முறை மேலும் பல அறிவியலாளர்களின் பங்களிப்பால் மிகவும் வளர்ந்துள்ளது. இது நவீன உயிரியல் மற்றும் மருத்துவத் துறைகளில், ஏன் நவீன அறிவியலில், பெரும் பங்காற்றுகிறது. இதற்கு உலகளாவிய ஆதரவு உள்ளது.


The full text of the joint statement by Indian Academy of Sciences, Indian National Science Academy and National Academy of Sciences, India

The Hon. Minister of State for Human Resource Development, Shri Satyapal Singh has been quoted as saying that “Nobody, including our ancestors, in writing or orally, have said they saw an ape turning into a man. Darwin’s theory (of evolution of humans) is scientifically wrong. It needs to change in school and college curricula.”

The three Science Academies of India wish to state that there is no scientific basis for the Minister’s statements. Evolutionary theory, to which Darwin made seminal contributions, is well established. There is no scientific dispute about the basic facts of evolution. This is a scientific theory, and one that has made many predictions that have been repeatedly confirmed by experiments and observation. An important insight from evolutionary theory is that all life forms on this planet, including humans and the other apes have evolved from one or a few common ancestral progenitors.

It would be a retrograde step to remove the teaching of the theory of evolution from school and college curricula or to dilute this by offering non-scientific explanations or myths.

The theory of evolution by natural selection as propounded by Charles Darwin and developed and extended subsequently has had a major influence on modern biology and medicine, and indeed all of modern science. It is widely supported across the world.

அன்புச் சொந்தங்களே, கீழேயுள்ள CLICK HERE பொத்தானை அழுத்தி இப்போதுவுக்கு நன்கொடை வழங்குங்கள்; சந்தேகங்களை நிவர்த்தி செய்ய +919445515340ஐ அழையுங்கள்:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here