ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவைத் தொடந்து மேற்கு வங்க முதல்வர் மம்தா டெல்லியில் புதன்கிழமை முதல் இரண்டு நாட்கள் தர்ணாவில் ஈடுபடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சாரதா சீட்டுக் கம்பெனி விவகாரம் தொடர்பாக கொல்கத்தா மாநகர காவல்துறை ஆணையர் ராஜீவ் குமாரிடம், சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்ய முயன்ற போது நடந்த விவகாரங்கள் தொடர்பாக, மத்திய அரசை எதிர்த்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி சமீபத்தில் மூன்று நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார்.

பின்னர் ராஜீவ் குமார் சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மம்தா பானர்ஜி தனது தர்ணா போராட்டத்தை கை விட்டார்.

இந்நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவைத் தொடந்து மேற்கு வங்க முதல்வர் மம்தா டெல்லியில் புதன்கிழமை முதல் இரண்டு நாட்கள் தர்ணாவில் ஈடுபடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்படும் இந்த தர்ணாவுக்கான ஏற்பாடுகளை டெல்லியில் திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் செய்து வருகிறார்கள்.

தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாளான  புதனன்று  மம்தா போராட்டத்தை தொடங்கி இருப்பது டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது

சந்திரபாபு நாயுடுவின் உண்ணாவிரத போராட்டத்தில்நடந்தது போலவே, மம்தா போராட்டத்திலும் பல்வேறு கட்சி தலைவர்களும் நேரில் சென்று ஆதரவு தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here