காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும் தென்னிந்திய நடிகர் சங்கத்தினர் ஞாயிற்றுக்கிழமை (இன்று) அறவழி போராட்டத்தை நடத்தினர்.

முன்னதாக இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு காலத்தை வீணடித்து வருவதாகக் குற்றம் சாட்டினார். மேலும் அவர், காவிரி மேலாண்மை வாரியத்தைவிரைவில் அமைக்காவிட்டால் அனைத்துத் தமிழர்களின் கோபத்துக்கும் அதிருப்திக்கும் மத்திய அரசு ஆளாக நேரிடும் எனவும் தெரிவித்தார்.

காவிரிக்காக போராடும் சூழலில் கர்நாடகத்தைச் சேர்ந்தவரை துணைவேந்தராக நியமித்திருக்க வேண்டாம் எனவுன் தெரிவித்தார். மேலும், மக்களின் போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் சென்னை சூப்பர்கிங்ஸ் வீரர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து கொண்டு விளையாடலாம் என்றும், ஐபிஎல் போட்டிகளை நிறுத்தினால் நல்லது என்றும் தெரிவித்தார்.

ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து பேசிய அவர், பல கோடி வருமானம் கிடைத்தாலும் பாதிப்பு ஏற்படுத்தும் ஆலை தேவையில்லை என்றார்.

இதையும் படியுங்கள்: உலக தண்ணீர் தினம் : 84.4 கோடி மக்கள் தண்ணீர் இல்லாமல் அவதி

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்