மத்திய அரசு டி.டி.வி.தினகரனுக்கு எதிராக வருமான வரித்துறையை ஏவியது

ஜெயா டிவி அலுவலகம், டிடிவி வீடு, எம்.நடராஜன் வீடு ஆகியவற்றில் சோதனைகள் நடப்பதாக தகவல்.

0
110
ஜெயா டிவி அலுவலகம்

மத்திய அரசுக்கு எதிர் நிலை எடுத்திருக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த டி.டி.வி.தினகரனுக்கு எதிராக மத்திய அரசின் வருமான வரித்துறை ஏவப்பட்டிருக்கிறது. மத்தியில் ஆட்சியிலிருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கு எதிராக பேசிய நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷாலின் அலுவலகத்துக்கு வருமான வரித்துறை இதற்கு முன்னர் சென்றது. ஜெயலலிதாவுக்கு வலதுகரமாக இருந்த தலைமைச் செயலாளர், மத்திய அரசை எதிர்த்த அரவிந்த் கெஜ்ரிவாலின் தலைமை ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆகியோருக்கு எதிராகவும் இதற்கு முன்பு இந்தத் துறை பயன்படுத்தப்பட்டுள்ளது.

மாநிலத்தின் உரிமைகளைப் பறிக்கும் நீட்டிலிருந்து நிரந்தர விலக்கு வேண்டும் என்பதை அண்ணா தி.மு.கவில் வலியுறுத்திப் பேசுகிற டி.டி.வி.தினகரன் மீது வருமான வரித்துறை ஏவப்பட்டிருப்பது சந்தேகமேயில்லாமல் மத்திய அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்வதை வெளிப்படுத்துகிறது. மத்திய அரசுக்கு எதிர் நிலை எடுப்பவர்களைப் பணிய வைப்பதற்கு தனது எந்திரங்களை மத்திய அரசு பயன்படுத்துவது தமிழக மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிகிறது.

அன்புச் சொந்தங்களே, கீழேயுள்ள CLICK HERE பொத்தானை அழுத்தி இப்போதுவுக்கு நன்கொடை வழங்குங்கள்; சந்தேகங்களை நிவர்த்தி செய்ய +919445515340ஐ அழையுங்கள்:

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்