கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் ஆய்வுக்கு சென்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் மீனவ மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 1,100க்கும் மேற்பட்ட மீனவர்கள் மாயமாகினர். காணாமல்போன மீனவர்களை மீட்க வலியுறுத்தி நீரோடி, தூத்தூர், சின்னத்துறை உள்ளிட்ட எட்டு கிராமங்களைச் சேர்ந்த 5000க்கும் மேற்பட்டவர்கள் குழித்துறையில், ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, புயலினால் பாதிக்கப்பட்ட குளச்சல் பகுதி மக்களை தமிழக ஆளுநர் பன்வாரிலல் புரோஹித் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவரை முற்றுகையிட்ட மீனவ குடும்பத்தினர், மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் எங்களைக் கொலை செய்து விட்டன என்றும், மீனவர்களை மீட்க முயற்சிக்காத மத்திய அரசு எதுக்காக இருக்கிறது எனவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படியுங்கள்: கூகுளை நடத்துவதும் மீன் கடை நடத்துவதும் ஒன்றா?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்