மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் விவசாயிகளை அழித்துவிடும்: ராகுல்காந்தி காட்டம்

"BJP goverment will have to withdraw the farm laws. The Congress will not relent till these laws are repealed. These laws are not to help farmers, but to finish them," Mr Gandhi said leading the protest outside Raj Niwas.

0
174

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை ரத்து செய்யக் கோரியும் டெல்லியின் பல எல்லைகளில் விவசாயிகள் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் டெல்லி துணை நிலை ஆளுநர் மாளிகைக்கு பேரணியாக சென்று முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக காங்கிரஸ் கட்சியினர் அறிவித்திருந்தனர். இதையடுத்து டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் பேரணி நடத்தினர். 

அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு உதவாது. மாறாக அவர்களை அழித்துவிடும். அம்பானி, அதானி ஆகியோருக்கு உதவுவதற்காத்தான் இந்தச் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதனால்தான் காங்கிரஸ் கட்சி விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்கிறது.

இந்த வேளாண் சட்டங்களை மத்திய அரசு  திரும்பப் பெறும் வரை காங்கிரஸ் கட்சி பின்வாங்காது. நிலம் அபகரிப்புச் சட்டம் முன்பு வந்தபோது, விவசாயிகளின் நிலத்தை எடுத்துக் கொள்ள முன்பு, மோடி அரசு முயன்றது. ஆனால், அதையும் அந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சிதான் தடுத்தது. இப்போது பாஜகவும், அவர்களின் சில நண்பர்களும் சேர்ந்து மீண்டும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்த இந்த வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்துள்ளார்கள்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக ராகுல் காந்தி  டிவிட்டரில் பதிவிட்ட கருத்தில் “ தங்களி்ன் உரிமைகளை வெல்வதற்காக அகங்காரம் பிடித்த மோடி அரசுக்கு எதிராக சத்யாகிரஹ போராட்டத்தை விவசாயிகள் நடத்தி வருகிறார்கள்.

விவசாயிகளுக்கு எதிராக நடந்துவரும் அட்டூழியத்துக்கும், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கும் எதிராக ஒட்டுமொத்த தேசமே குரல் கொடுத்து வருகிறது. நீங்களும் இந்த சத்யாகிரஹப் போராட்டத்தில் ஒரு பகுதியாக பங்கேற்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள வேளாண் சட்டங்கள், விவசாயிகளுக்கு உதவுவதற்காக கொண்டு வரப்படவில்லை. அவர்களை ஒழிப்பதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது. பாஜக அரசு கண்டிப்பாக இந்தச் சட்டங்களை வாபஸ்பெற வேண்டும். வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை காங்கிரஸ் கட்சி ஓயாது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here