சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து வல்லூர் அனல்மின் நிலையம் மூடப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசின் விதிகளை மீறி சதுப்பு நில பகுதிகளில் வல்லூர் அனல்மின் நிலையம் நிலக்கரி சாம்பலை கொட்டுவதை
எதிர்த்து வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் எண்ணூரில் சதுப்பு நில பகுதிகளில் நிலக்கரி சாம்பலை கொட்ட வல்லூர் அனல் மின்நிலையத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

விதிகளை பின்பற்றாமல், சுற்றுச்சூழலுக்கும், சுகாதாரத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அனல்மின் நிலையம் செயல்பட்டுள்ளதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும் வல்லூர் அனல்மின் நிலையத்துக்கு மத்திய அரசு அளித்த அனுமதி 2018 மார்ச்சுடன் முடிவடைந்தது என்றும், மத்திய அரசு அளித்த அனுமதியை புதுபிக்காமல் அனல்மின் நிலையம் தொடர்ந்து செயல்படுவவதாக உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

வல்லூர் அனல்மின் நிலையத்தில் 3 அலகுகளிலும் தலா 500 மெகாவாட் என 1500 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் வல்லூர் அனல்மின் நிலையத்தை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று அனல்மின் நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.