மத்திய அரசின் முதன்மைப் பொருளாதார ஆலோசகராகக் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

முதன்மைப் பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்பிரமணியன் சொந்தக் காரணங்களுக்காக அந்தப் பதவியில் இருந்து விலகினார். கடந்த 5 மாதங்களாகக் காலியாக இருந்த அந்தப் பதவியில் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியனை அரசு நியமித்துள்ளது. அவர் மூன்றாண்டுகளுக்கு இந்தப் பதவியில் இருப்பார்.

ஐதராபாத்தில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆப் பிசினஸ் கல்வி நிலையத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வரும் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன், அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் முனைவர்ப்பட்டம் பெற்றவர். ஐஐடி, ஐஐஎம் ஆகியவற்றில் பயின்றபோது முன்னணி மாணவராகத் தேர்ச்சி பெற்றவர்.

வங்கியியல், நிறுவன ஆளுமை, பொருளாதாரக் கொள்கை ஆகியவற்றில் உலக அளவில் முன்னணியில் உள்ள வல்லுநர்களில் ஒருவர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here