மத்திய ஜவுளி மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அமைச்சர் ஸ்மிருதி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இந்தியாவில் கொரோனாவைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தபடிதான் உள்ளது. குறைவது போல தோன்றினாலும் கூட அதன் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. இந்த நிலையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டார். இதுகுறித்து ஸ்மிருதி போட்டுள்ள டிவீட்டில், ‘ஒரு அறிவிப்பை வெளியிடுவதற்கு வார்த்தைகளைத் தேடுவது என்பது என்னைப் பொறுத்தவரை அரிதானது. எனவே இந்த அறிவிப்பை சிம்பிளாக வெளியிடுகிறேன். எனக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. எனவே சமீபத்தில் என்னைத் தொடர்பு கொண்டவர்கள் எல்லாம் தங்களை பரிசோதித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என்று ஸ்மிருதி இராணி கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here