மத்தியப் பிரதேச மாநிலத்தில், ரயில் தண்டவாளத்தில் சிக்கிய ஒருவர், எந்தவித காயமும் இன்றி உயிருடன் தப்பிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தின் ஜவஹர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராதேஷ்யாம். இவர், சத்னா ரயில்நிலையத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது முதல் நடைமேடையிலிருந்து இரண்டாம் நடைமேடைக்குச் செல்வதற்காக தண்டவாளத்தைக் கடந்துள்ளார். அப்போது, தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் ஒன்று புறப்பட்டது. இதனைக் கண்ட ராதேஷ்யாம், சற்றும் அதிர்ச்சியடையாமல் தண்டவாளத்தில் அசையாமல் படுத்துக்கொண்டார். சரக்கு ரயில் அவரைக் கடந்து செல்ல சுமார் மூன்று நிமிடங்களுக்கும் மேலாக ஆனது. அதுவரை அவர் படுத்தநிலையிலேயே இருந்தார். ரயில் கடந்து சென்ற பின்னர் எந்தவித சிறுகாயமும் இன்றி அவர் தப்பித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

நன்றி : ஹிந்துஸ்தான் டைம்ஸ்

இதையும் படியுங்கள் : குடிபோதையில் போலீஸ் பைக்கை ஓட்டிச் சென்ற வாலிபர்; வைரல் வீடியோ

பணக் கஷ்டத்திலிருக்கும் இப்போதுவுக்கு கீழேயுள்ள GIVE 5 பொத்தானை அழுத்தி நன்கொடை வழங்குங்கள்:

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்