பீகாரில் கொண்டு வரப்பட்ட மதுவிலக்கு நடவடிக்கை தோல்வியடைந்து விட்டதாக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்கே சின்ஹா தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலத்தில், காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வந்த ஜக்கிய ஜனதா தளம் கட்சி, கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் மதுவிலக்கு அமல்படுத்தியது. இதற்கு அம்மாநில மக்களிடையே நல்ல வரவேற்பும் கிடைத்தது.

இந்நிலையில் அரசியல் காரணங்களால் ஐக்கிய ஜனதா தளம் கட்சி, பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு, அம்மாநிலத்தில் ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்கே சின்ஹா, மதுவிலக்கு திட்டம் குறித்து மறுபரிசீலனனை செய்ய வேண்டும் என்றும், மேலும் சிறந்த திட்டமிடல் தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், மதுவிலக்கைக் கொண்டுவந்ததன் நோக்கம் நல்லதாக இருந்தாலும், அதனை அமல்படுத்துவதில் அரசு இயந்திரங்கள் சரிவர செயல்படவில்லை என்றும், இதனால் இத்திட்டம் பலனளிக்காமல் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: 35 கோடி குழந்தைகள் போர் நடைபெறும் பகுதிகளில் தவிப்பு – Save the Children

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்