தேவையான பொருட்கள் :

• மட்டன் கொத்து கறி – 200 கிராம்
• தோசை மாவு – ஒரு கப்
• வெங்காயம் – ஒன்று
• தக்காளி – ஒன்று
• முட்டை – 3
• இஞ்சி பூண்டு விழுது – அரை தேக்கரண்டி
• மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி
• மல்லி தூள் – 3/4 தேக்கரண்டி
• கரம் மசாலா – அரை தேக்கரண்டி
• மிளகு தூள் – ஒரு தேக்கரண்டி
• மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
• சீரகதூள் – அரை தேக்கரண்டி
• எண்ணெய் – 3 தேக்கரண்டி
• கடுகு,- அரை தேக்கரண்டி
• சோம்பு – அரை தேக்கரண்டி
• உப்பு – தேவைக்கேற்ப

Captured Videos2

கறியுடன் கால் தேக்கரண்டி மிளகாய் தூள், உப்பு சேர்த்து குக்கரில் 2 விசில் வரும் வரை வேக வைத்து கொள்ளவும். கறி நன்றாக பஞ்சாக வெந்திருக்க வேண்டும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். முட்டையை அடித்து வைக்கவும் (உப்பு தேவையில்லை). வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சோம்பு தாளிக்கவும்.

அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி விட்டு தக்காளி சேர்த்து குழைந்ததும் மிளகு தூள் தவிர மற்ற தூள் வகைகளை சேர்த்து பிரட்டி விடவும்.

அதனுடன் வேக வைத்த கறியை தண்ணீரோடு சேர்த்து கொதிக்க விட்டு கெட்டியாக கூட்டு பதம் வந்ததும் இறக்கவும் (நீர்க்க இருக்க கூடாது).

அடுப்பை சிம்மில் வைத்து தோசைக்கல்லில் மாவை எடுத்து சிறிய ஊத்தப்பமாக ஊற்றவும். அது லேசாக வெந்ததும் ஒரு கரண்டி முட்டை ஊற்றவும்.

அதன் மேல் ஒரு கரண்டி கறியை வைத்து பரப்பி விடவும். பிறகு மேல் கால் தேக்கரண்டி மிளகு தூள் தூவிவிட்டு சுற்றி எண்ணெய் விட்டு திருப்பி போட்டு தோசையை அழுத்தி விடவும்..

ஒரு நிமிடம் விட்டு எடுத்தால் சுவையான மதுரை கறி தோசை தயார். இதற்கு தொட்டு கொள்ள எதுவும் தேவையில்லை. காரசாரமாக அப்படியே சாப்பிடலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here