சுவையான மதுரை கறி தோசை செய்வது எப்படி? அனைவரும் விரும்பும் ருசியான மதுரை கறி தோசை ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க.

சமைக்க தேவையானவை :

  •  தோசை மாவு – சிறிதளவு
  •  கொத்துக்கறி – கால் கிலோ
  •  இஞ்சி, பூண்டு விழுது – அரை டீஸ்பூன்
  •  கரம் மசாலா – அரை டேபிள் ஸ்பூன்
  •  மல்லித் தூள், மிளகாய்த் தூள் – தலா 2 டீஸ்பூன்
  •  மிளகுத் தூள் – அரை டீஸ்பூன்
  •  மஞ்சள் தூள் – சிறிதளவு
  •  உப்பு, எண்ணெய் – தேவையான அளவு


மதுரை கறி தோசை செய்முறை : 

·         Step 1.

முதலில் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, நன்கு சூடானதும் இஞ்சி, பூண்டு விழுதைப் போட்டு வதக்குங்கள்.

·         Step 2.

இப்பொழுது அதனுடன் கொத்துக் கறியைச் சேர்த்து வேக வையுங்கள். பின்பு மல்லித் தூள், மிளகாய்த் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்துக் கிளறவேண்டும் .

·         Step 3.

சிறிதளவு தண்ணீர் சேர்த்து கிரேவி பதம் வரும்வரை கறியை வேகவிட்டு எடுங்கள்.

·         Step 4.

பின்னர் தோசைக் கல்லில் மாவை ஊற்றி, வேகவைத்த கறிக்கலவையை தோசையின் மேல் பரப்புங்கள்.

·         Step 5.

நான்கு முதல் ஐந்து நிமிடங்கள் குறைந்த தீயில் வேகவிடுங்கள். தோசை மேல் மல்லித்தழை அல்லது வெங்காயத்தைத் தூவுங்கள். நன்றாக வெந்ததும் எடுத்து, சூடாகப் பரிமாறுங்கள். கறிதோசைக்கு கிரேவி, குருமா இவற்றில் ஏதாவதொன்றைத் தொட்டுக்கொள்ளலாம் நன்றாக இருக்கும் .