( ஜூன் 27, 2018 அன்று வெளியான செய்தி )

நரேந்திர மோடி தலைமையிலான அரசு 4 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து தங்களுடைய அரசு 48 மாதங்களில் 13 எய்ம்ஸ் மருத்துவமனைகளை அமைக்க ஒப்புதல் கொடுத்தது என்று பெருமிதத்தோடு அறிவித்தது . இந்தியா டுடே நடத்திய புலனாய்வில் ஒரு எய்ம்ஸ் மருத்துமனைக் கூட ஆரம்பிக்கபடாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Screen Shot 2018-06-27 at 5.37.06 PM

இந்த 13 எய்ம்ஸ் மருத்துவமனைகள் என்ன நிலையில் இருக்கின்றன என்று கண்டறிய ‘இந்தியா டுடே’ பத்திரிகை ஆர்டிஐ (RTI) மூலம் தகவலைப் பெற்றது . மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகத்திடம் ஆர்டிஐ மூலம் கேள்விகள் கேட்கப்பட்டு இந்தத் தகவல் அனைத்தும் பெறப்பட்டுள்ளது.

மோடி அரசு ஒப்புதல் அளித்த 13 எய்ம்ஸ் மருத்துமனைகளில் 5 எய்ம்ஸ் மருத்துமனைகளுக்கு இன்னமும் எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை.

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது . பிஹார்,குஜராத், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு நிதி ஒதுக்கீடும் இல்லை, எப்போதும் முடிக்கப்படும் என்ற காலக்கெடுவும் மத்திய அரசிடம் இல்லை என்று தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை உருவாக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவித்தது. அதன்படி 2014-15, 2015-16, 2017-18-ஆம் ஆண்டு பட்ஜெட்டுகளில் 13 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்க அறிவிப்புகள் வெளியாகின. ஆனால், ஆட்சிக்கு வந்து 48 மாதங்கள் ஆகியும் இன்னும் எந்த எய்ம்ஸ் மருத்துவமனையும் செயல்பாட்டுக்கு வரவில்லை. ஆர்டிஐ வெளியிட்ட தகவலில் கீழக்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

Screen Shot 2018-06-27 at 5.14.35 PM

Screen Shot 2018-06-27 at 5.14.54 PM

*ஆர்டிஐ வெளிட்ட தகவலின்படி ஜம்மு , காஷ்மீர், பிஹார், தமிழகம், குஜராத் ஆகிய இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் தரப்பட்டு இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

* ஜம்மு , காஷ்மீர், பிஹார், தமிழகம், குஜராத் ஆகிய இடங்களில் அமைக்கப்ப்டவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகள் எப்போது கட்டி முடிக்கப்படும் என்ற காலக்கெடுவும் இல்லை.

எய்ம்ஸ் உத்தரப்பிரதேசம்

*உத்தரப்பிரதேசத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு 10 சதவீத நிதி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை 2020-ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு வரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ரூ.1011 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு, இதுவரை ரூ.98.34 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

எய்ம்ஸ் ஆந்திர பிரதேசம்

*ஆந்திரா மாநிலத்தில் ரூ.1618 கோடியில் எம்ய்ஸ் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு, அதில் ரூ.233.88 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் செய்ல்படும் என்று கூறப்பட்டுள்ளது . ஆனால், ஒன்றரை ஆண்டுக்குள் இது முடியாது.

எய்ம்ஸ் மேற்குவங்காளம்

*மேற்குவங்காளத்தில் கல்யாணி பகுதியில் ரூ.1754 கோடியில் எய்ம்ஸ் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு ரூ.278.42 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது வரும் 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் செயல்பாட்டுக்கு வரும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. வேலைகள் துரிதமாக நடத்தப்பட்டால் இஅதை முடிக்கலாம்.

எய்ம்ஸ் மாஹாரஷ்டிரம்

*மஹாராஷ்டிராவில் நாக்பூரில் அக்டோபர் 2020ஆம் ஆண்டுக்குள் எய்ம்ஸ் மருத்துவனை ரூ.1577 கோடியில் அமைக்க ஒப்புதல் அளித்த மத்திய அரசு இதுவரை ரூ.231.29 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது.

எய்ம்ஸ் அஸாம்

*அஸாம் மாநிலத்தில் கம்ருப் மாவட்டத்தில் எம்ய்ஸ் மருத்துவமனை ரூ.1123 கோடியில் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு இதுவரை ரூ.5 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை 2021ஆம் ஆண்டு முடிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது .

எய்ம்ஸ் பஞ்சாப்

*பஞ்சாப் மாநிலத்தில் பத்தின்டா நகரில் ரூ.925 கோடியில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இதுவரை ரூ.36.57 கோடி நிதி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஜூன் , 2020-இல் இந்த மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது .

எய்ம்ஸ் ஜம்மு & காஷ்மீர்

*ஜம்முவில் சம்பா மாவட்டத்திலுள்ள விஜய்பூரிலும் , காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்திலுள்ள அவந்திபோராவிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு, ரூ.90.84 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காலக்கெடு ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை. இப்போது ஜம்மு காஷ்மீரில் ஆட்சியும் இல்லை.

எய்ம்ஸ் ஹிமாச்சல் பிரதேசம்

*ஹிமாச்சலப்பிரதேச மாநிலம் பிலாஸ்பூரில் ரூ.1350 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு, பிரதமர் மோடி 2017 அக்டோபர் 3-ஆம் தேதி அடிக்கல்லும் நாட்டினார். ஆனால், இதுவரை நிதி வழங்கப்படவில்லை. இந்த மருத்துவமனை 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

எய்ம்ஸ் பிஹார்

*பிஹார் மாநிலத்தில் 2015-16ஆம் ஆண்டு பட்ஜெட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கத் திட்டமிடப்பட்டு, கடந்த 3 ஆண்டுகளாக அங்கு இடமும் முடிவு செய்யப்படவில்லை, நிதியும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை

எய்ம்ஸ் தமிழ்நாடு

*தமிழகத்தில் மதுரைக்கு அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை எந்தவிதமான நிதியும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. எப்போது இந்த மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என்ற காலக்கெடுவும் குறிப்பிடப்படவில்லை.

எய்ம்ஸ் ஜார்கண்ட்

*ஜார்கண்ட் மாநிலத்தில் டியோகார் நகரில் ரூ.1103 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு , அதற்காக ரூ.9 கோடி மட்டுமே அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. 2021-ஆம் ஆண்டு இந்த மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது .

எய்ம்ஸ் குஜராத்

* குஜராத் மாநிலத்தில் எய்ம்ஸ் அமைப்பதற்கு எந்தவிதமான நிதியும் ஒதுக்கீடு செய்யவில்லை, எப்போது கட்டிமுடிக்கப்படும் என்ற காலக்கெடுவும் இல்லை.

Courtesy : India Today

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here