மதவெறியைத் தூண்டுவதிலும், விற்பதிலும் எனக்கு நம்பிக்கையில்லை – மோடியை சூசகமாக தாக்கும் மம்தா பானர்ஜி

0
556

மேற்கு வங்கத்தில் பாஜக, இந்த முறை 18 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திரிணாமூல் காங்கிரஸுக்குத் தேர்தல் முடிவு பேரதிர்ச்சியாக வந்துள்ளது. இந்நிலையில் இது குறித்து கவிதை மூலம் எதிர்வினையாற்றியுள்ளார் மம்தா. 

மேற்கு வங்கத்தில் இந்த முறை பாஜக, மொத்தம் இருக்கும் 42 இடங்களில் 18 தொகுதிகளைக் கைப்பற்றியது. திரிணாமூல், 22 இடங்களைக் கைப்பற்றியது. 2014 ஆம் ஆண்டு தேர்தலில், பாஜக  2 இடங்களில் மட்டுமே வென்றிருந்தது 

மம்தா பானர்ஜி தந்து டிவிட்டர் பக்கத்தில் வங்கம், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் ‘நான் ஏற்றுக் கொள்ளவில்லை’ என்ற கவிதையைப்  பதிவிட்டுள்ளார். “மதவாதத்தைப் பரப்புவதும், மதவெறியைத் தூண்டுவதிலும் எனக்கு நம்பிக்கையில்லை” என்று பெயர் குறிப்பிடாமல் சூசகமாக பதிவிட்டுள்ளார். தொடர்ந்து இதைப் போன்ற கருத்துகளால் கவிதை நிரம்பியுள்ளது. அவரின் இந்தக் கவிதை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோரை குறிப்பதாகத் தெரிகிறது. 

மதவாதத்தின் சாயத்தை நான் நம்புவதில்லை. ஒவ்வொரு மதத்திலும் மதவெறியும், சகிப்புதன்மையும் இருக்கிறது . நான் வங்கத்தில் நடந்த மென்மையான மறுமலர்ச்சியில் உருவான ஒரு எளிமையான ஊழியர், மதவெறியை விற்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. மனிதாபிமானத்திலிருந்து வெளிவரும் வெளிச்சத்தை நான் மதமாக கருதுகிறேன் , நம்புகிறேன். சிலர் செல்வந்தர்களின் நிழலில் வாழ மதவெறியை வெற்றியின் சின்னமாக கருதுகிறார்கள். நான் என் எண்ணற்ற கடமைகளில் மூழ்கி போயிருக்கிறேன். உங்களுக்கு அதுமாதிரி கடமைகள் ஒன்றுமில்லாததால் தான் மதவெறியை விற்றுக் கொண்டிருக்கிறீர்களா? சகிப்புதன்மையை நம்புபவர்கள் ஒன்றாக இணைந்து எல்லோரையும் எழுப்பலாம். வெறியை நல்லொழுக்கமாக  உருவாக்க முற்படுகிறது ஒரு நாடு என்று பதிவிட்டுள்ளார். 

கடந்த 2 ஆண்டுகளாகவே, மேற்கு வங்கத்தில் பாஜக-வுக்கும் திரிணாமூலுக்கும் இடையில் பிரச்னை வந்தது. குறிப்பாக பாஜக-வின் பிரசாரக் கூட்டங்கள், பேரணிகள் மற்றும் மதம் சார்ந்த விழாக்களுக்கு மேற்கு வங்க அரசு கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here