மதவகுப்புவாதத்தைத் தூண்டும் வகையில் பதிவிட்ட மாணவி ; குரான் விநியோகிக்க உத்தரவிட்டு ஜாமீன் கொடுத்த நீதிபதி

0
685

ஒரு இந்து மாணவி மதவகுப்புவாதத்தைத் தூண்டும் வகையில் தனது ஃபேஸ்புக்கில் கருத்தை பதிவிட்டுள்ளார். அதற்காக அவர்  கைது செய்யப்பட்டார். அவருக்கு நீதிமன்றம் ஒரு நிபந்தனையுடன்  ஜாமீன் வழங்கியுள்ளது . அந்த நிபந்தனை என்னவென்றால் 5 குரான்களை 5 நிறுவனங்களுக்கு சென்று கொடுக்க வேண்டும். 

அந்த மாணவியின் பெயர் ரிச்சா பாரதி . அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் யாரையாவது பழிவாங்க வேண்டுமென்றால்  ஒரு சமுதாயத்தைச் (முஸ்லிம்) சேர்ந்தவர்கள் மட்டும் ஏன் தீவிரவாதிகளாக மாற வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்று பதிவிட்டுள்ளார். அவரது பதிவு மதவகுப்புவாதத்தை தூண்டுவதாக அமைந்திருக்கிறது என்று கூறப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். 

அவருக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி மனிஷ் சிங் ஒரு நிபந்தனையை விதித்தார். 5 குரான்களை நூலகத்துக்கும், கல்லூரிக்கும், பள்ளிக்கூடத்துக்கும் , சாதர் அஞ்சுமான் இஸ்லாமிய கமிட்டிக்கும் 15 நாட்களுக்குள் சென்று கொடுக்கும்படி உத்தரவிட்டார். 

இது குறித்து அந்த மாணவியின் வழக்கறிஞர் ராம்பர்வேஷ் சிங் கூறுகையில்  5 குரான்களை நூலகத்துக்கும், கல்லூரிக்கும், பள்ளிக்கூடத்துக்கும் , சாதர் அஞ்சுமான் இஸ்லாமிய கமிட்டிக்கும் 15 நாட்களுக்குள் சென்று கொடுக்கும்படி உத்தரவிட்டார். கொடுத்ததற்கான ரசீதை நீதிமன்றத்தில் சமர்பிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார் என்றார்.  

ரிச்சா பாரதி ஃபேஸ்புக்கில் பதிவிட்ட கருத்துக் குறித்து ராஞ்சி பித்தோரியா காவல்நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது. அதனால் அவர் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து பல வலதுசாரி இந்த்துத்துவா அமைப்புகள் காவல்நிலையம் முன்பு போராட்டத்தில் இறங்கினர். 

இந்தத் தீர்ப்புக்கு பின் ரிச்சா பாரதி ஜார்கண்ட் Zee Vihar க்கு அளித்த பேட்டியில் நீதிமன்றம் உத்தரவிட்டதை நான் செய்ய போவதில்லை. நிறைய முஸ்லிம்கள் வகுப்புவாதத்தை ஏற்படுத்தும் விதத்தில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். கீழ் காணும் வீடியோவில் அவர்களை ஏன் கைது செய்யவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார் 

டிக்டொகில் ஃபைசு என்பவர் சமீபத்தில் கும்பல் வன்முறையால் கொலைசெய்யப்பட்ட தப்ரேஷ் அன்சாரியின் குழந்தைகள் இந்தக் கும்பலை பழிவாங்க தீவிரவாதிகளாக வந்தாலும் வருவார்கள் என்று கூறியிருந்தார் அதற்கு பதிலளித்த நான் ஏன் ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் பழிவாங்கலில் ஈடுபடுகிறார்கள்? காஷ்மீர் பண்டிட்டுகளும், இந்துக்களும்  ஏன் தீவிரவாதிகளாக வேண்டும் என்று நினைக்கவில்லை என்று பதிவிட்டிருந்தேன் என்று இந்த வீடியோவில் கூறியுள்ளார். 

செய்தியாளர் குரான் வழங்குவதை பற்றிக் கேட்ட போது நான் குரான் வழங்க மாட்டேன் . இன்று என்னை குரான் கொடுக்க சொல்வார்கள்; நாளைக்கு முஸ்லிம் மதத்துக்கு மாறச் சொல்வார்கள் . இந்து மதத்தை பற்றி பேசும் முஸ்லிம்கள் யாரையாவது ராமாயாணயத்தை அல்லது துர்கா பற்றி அறிந்துக் கொள்ள கூறியிருக்கிறார்களா என்று கேள்வி எழுப்பினார். 

இந்தத் தீர்ப்புகுறித்து டிவிட்டரில் பலர் பல்வேறு கருத்துக் கூறி வருகின்றனர். மேலும் குரான் ‘quran’ இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது. 

TimesOfIndia