உத்தரப் பிரதேச மாநிலத்தில் மதரஸாக்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தை யோகி ஆதித்யநாத் தலைமயிலான அரசு நிறுத்தியதற்கு காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அரசு மானியத்துடன் 560 மதரஸாக்கள் (இஸ்லாமியப் பள்ளிகள்) இயங்கி வருகின்றன. இந்நிலையில் வரையறுக்கப்பட்ட விதிமுறைகளில் அடிப்படையில் 46 மதரஸாக்கள் செயல்படவில்லை எனக் கூறி உத்தரப் பிரதேச மாநில அரசு, அந்த மதரஸாக்களுக்கான மானியத்தை நிறுத்தியுள்ளது. கான்பூர், குஷிநகர், கன்னூஜ், ஆஸம்கர், மஹாராஜ்கஞ்ச், சித்தார்த்நகர், பனராஸ், ஃபைஸாபாத், ஹாஜிபூர், ஜான்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த மதரஸாக்கள் செயல்பட்டு வந்தன.

gulam

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவருமான குலாம்நபி ஆசாத், பாரதிய ஜனதா கட்சி எந்த மதத்தினரையும் மதிப்பதில்லை என குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர், ”காங்கிரஸ் கட்சி அனைத்து மதத்தினரையும் மதிக்கும். ஆனால் பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் தலைமை அப்படியல்ல. இதுதான் பாரதிய ஜனதா கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் உள்ள வேறுபாடு” என்றார்.

இதையும் படியுங்கள்: “ஏழை மக்களுக்கு நம்பிக்கை தரும் மாணவர் போராட்டங்கள் இவை”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்