மதமாற்றம் செய்வது என்பது செய்த உதவிக்கு பிரதிபலனாக பெண்களை உறவுக்கு அழைப்பது போன்றது – எளிமையான எம்பி ஒடிசாவின் மோடியின் அனல் கக்கும் பேச்சு

0
508


மக்களை மதமாற்றம் செய்வதென்பது, செய்த உதவிக்கு பிரதிபலனாக பெண்களை உறவுக்கு (செக்ஸ்க்கு) அழைப்பது போன்றது என்று சமீபத்தில் ஒடிசாவிலிருந்து எம்பியாகி ஒடிசாவின் மோடி என்றழைக்கப்பட்ட பிரதாப் சாரங்கி the print தளத்திற்கு கொடுத்த பேட்டியில் கூறியுள்ளார். 

பிரதாப் சாரங்கி கூறிய வார்த்தைகள் இதுதான் – ‘Religious conversion is like Sex in exchange for favours’ – Minister Pratap Sarangi

மத்திய இணை அமைச்சராகப் பதவியேற்ற பின்னர், சமீபத்தில் the print க்கு கொடுத்த பேட்டியில்  சாரங்கி கூறிய கருத்து இது. 

ஒடிசா மாநிலத்தில் பாலசோர் மக்களவைத் தொகுதியில்  போட்டியிட்டு வென்ற பாஜக எம்.பி. பிரதாப் சாரங்கி, தனது சைக்கிளில் பிரசாரம் செய்து ஒற்றைப் பையுடன் டெல்லிக்கு பயணமாகி கால்நடை வளர்ப்புத் துறை அமைச்சராகவும் இருக்கிறார். 

the print க்கு கொடுத்த பேட்டியில் – பிரதாப்  சாரங்கியிடம்,   ஒடிஷாவில் எரித்துக் கொல்லப்பட்ட ஆஸ்திரேலிய பாதிரியார் கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் கொலை குறித்தும் அதில் சாரங்கியின் பங்கு குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. 

உச்சநீதிமன்ற நீதிபதி டி பி வத்வா தலைமையிலான  கமிஷன் அறிக்கை, ஒடிஷா உயர்நீதிமன்றம்,  அன்றைய இந்தியக்குடியரசுத் தலைவர் அனைவரும் உறுதிப்படுத்தி விட்டார்கள் அந்தக் கொலை வழக்கில் பஜ்ரங்தளம்  அமைப்பிற்கு தொடர்பு இல்லை என. அப்படி இருக்கும் போது எதிர்கட்சிகளின் கற்பனைகளுக்கு எல்லாம் நான் பதில் அளிக்க விரும்பவில்லை எனத் தெரிவித்தார்.

அத்துடன், கொலை செய்யப்பட்ட பாதிரியாரின் மனைவி இப்போதும் ஒடிஷாவில் அதே பழங்குடி கிராமத்தில் தான் குடியிருக்கிறார். எனவே அங்கு இப்போதும் தொடர்ந்து மக்கள் மதமாற்றம் செய்யப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறார்களா? எனும் கேள்விக்கு பதில் அளிக்கும் போதுதான் மக்களை மதமாற்றம் செய்வதென்பது, செய்த உதவிக்கு பிரதிபலனாக பெண்களை உறவுக்கு (செக்ஸ்க்கு) அழைப்பது போன்றது என்றார். 

ஒரு பெண்ணுக்கு படிப்பும், அவளுக்கான மருத்துவ செல்வுகளையும் செய்து கொடுத்தப் பின்னர் அப்பெண்ணை உறவுக்கு அழைப்பது குற்றம், அதேபோல்தான் மதமாற்றம் செய்வதும் என்றார் சாரங்கி .

அதாவது மதமாற்றத் தடைச் சட்டம் 1967இன் படி, ஒருவரைக் கட்டாயப்படுத்தியோ ஏமாற்றியோ அல்லது சலுகைகள் காட்டியோ மதமாற்றம்செய்வது தண்டனைக்குரிய குற்றம். அதற்கு மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என்பதையும் சுட்டிக்காட்டி பேசியுள்ளார் சாரங்கி அந்தப் பேட்டியில் . 

ஒடிசா (அப்போது ஒரிசா என்றழைக்கப்பட்டது) மாநிலத்தில் கடந்த 1999-ஆம் ஆண்டு பஜ்ரங் தளம் அமைப்பைச் சேர்ந்த தாரா சிங் என்ற இந்து பயங்கரவாதியின் தலைமையில் வந்த கும்பலொன்று, அம்மாநிலத்தில் மதப் பிரச்சாரம் செய்து வந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிறிஸ்துவப பாதிரியார் கிரஹாம் ஸ்டெயின்ஸையும், சிறுவர்களான பிலிப், திமோதி என்ற அவரது இரு மகன்களையும் – அவர்கள் மூவரும் ஒரு ஜீப்பில் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் உயிரோடு எரித்துக் கொன்றனர் . இந்த பயங்கரமான் அசெயலை செய்தவர்கள் பஜ்ரங் தளம் அமைப்பையும், பாஜகவையும் சேர்ந்தவர்களாஅன தாரசிங்கும் , அவரது கூட்டாளியும்தான். 

இந்தச்சம்பவம் நடந்தபோது ஒடிசா பஜ்ரங் தளம் அமைப்பின் தலைவராக இருந்தவர் பிரதாப் சாரங்கி. இந்துத்துவா கொள்கைகளைக் கொண்ட சாரங்கி குற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்ட பின்பும் கூட , கிறிஸ்தவ மிஷினரிகளுக்கு எதிராகப் பேசுவதில் எவ்வித தயக்கமும்  காட்டியதில்லை.

2002 ஆம் ஆண்டு பஜரங் தளம் உள்ளிட்ட சில வலதுசாரி குழுக்கள் ஒடிஷா மாநில சட்டசபை மீது தாக்குதல் நடத்தியது, மக்களிடையே கலவரத்தைத் தூண்டியது, பொது சொத்திற்கு சேதம் விளைவித்தது என பல்வேறு பிரிவுகளில் பிரதாப் சாரங்கி கைது செய்யப்பட்டார். அவர் மீது இது போன்ற ஏழு கிரிமினல் வழக்குகள் இப்போதும் நிலுவையில் உள்ளன.

தற்போது the print தளத்திடம் கொடுத்தப் பேட்டியில் கூட அவருடைய மதவெறிதான் வெளிப்படுகிறது. மீண்டும் மதமாற்றத் தடைச்சட்டம் பற்றிப் பேசி மக்களிடையே மத ரீதியிலான உணர்வுகளை எழுப்புவது போல்தான் இருக்கிறது ஒடிசாவின் மோடி  பிரதாப் சாரங்கியின் பேச்சு .  

பாதிரியார் குடும்பத்தோடு எரிக்கப்பட்ட சம்பவம் பற்றிய முன்னுரை  

ஒடிசா (அப்போது ஒரிசா என்றழைக்கப்பட்டது) மாநிலத்தில் கடந்த 1999-ஆம் ஆண்டு பஜ்ரங் தளம் அமைப்பைச் சேர்ந்த தாரா சிங் என்ற இந்து பயங்கரவாதியின் தலைமையில் வந்த கும்பலொன்று, அம்மாநிலத்தில் மதப் பிரச்சாரம் செய்து வந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிறிஸ்துவப பாதிரியார் கிரஹாம் ஸ்டெயின்ஸையும், சிறுவர்களான பிலிப், திமோதி என்ற அவரது இரு மகன்களையும் – அவர்கள் மூவரும் ஒரு ஜீப்பில் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் உயிரோடு எரித்துக் கொன்றனர். 

இப்பயங்கரவாதப் படுகொலையைச் செய்த தாரா சிங் உள்ளிட்ட 13 பேரையும் குற்றவாளிகள் என அறிவித்த குர்தா குற்றவியல் நீதிமன்றம், தாராசிங்கிற்குத் தூக்கு தண்டனையும், மற்ற 12 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்தது.

இவ்வழக்கின் மேல்முறையீட்டில், ஒரிசா உயர் நீதிமன்றம் தாரா சிங்கிற்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது; ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மற்ற 12 குற்றவாளிகளுள் மகேந்திரா ஹெம்ப்ராம் என்பவனின் தண்டனையை மட்டும் உறுதி செய்து, மீதி 11 குற்றவாளிகளையும் நிரபராதிகள் என விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

ஒரிசா உயர் நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை எதிர்த்து சி.பி.ஐ. தொடுத்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஒரிசா உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை  உறுதி செய்து தீர்ப்பளித்தது . அரிதினும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை விதிக்க வேண்டும்; அதுவும் அந்தந்த சம்பவத்தின் உண்மை நிலை, சூழ்நிலையை பொறுத்தே அமைய வேண்டும்; இவ்வழக்கில் பாதிரியார் ஸ்டெயின்ஸும் அவரது இரு குழந்தைகளும் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் எரித்துக் கொல்லப்பட்டிருந்தாலும், (குற்றவாளிகளின்) நோக்கம் மதப் பிரச்சாரம் என்ற பெயரில் ஏழை பழங்குடியின மக்களைக் கிறித்தவ மதத்திற்கு மாற்றிக் கொண்டிருந்த பாதிரியார் ஸ்டெயின்ஸுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்பதுதான்” எனக் குறிப்பிட்டு, தாரா சிங்கின் தண்டனை குறைக்கப்பட்டதை நியாயப்படுத்தியிருக்கிறது.  இவ்வழக்கில் சதித் திட்டம் தீட்டப்பட்டதற்கான ஆதாரமும் இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டது . 

1999-ஆம் ஆண்டு ஸ்டெயின்ஸ் பாதிரியார் தனது குழந்தைகளோடு எரித்துக் கொல்லப்பட்டபொழுது நாட்டில் நிலவிய சூழ்நிலை என்ன?  அப்பொழுது வாஜ்பாயின் தலைமையில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது.  தாழ்த்தப்பட்டவர்களும் பழங்குடி மக்களும் இந்து மதத்தில் இருந்து தப்பித்து ஓடுவதைத் தடுக்கும் முகமாக, “மதமாற்றம் பற்றித் தேசிய விவாதம் நடத்த வேண்டும்” என ஆர்.எஸ்.எஸ். கும்பல் கூச்சல் போட்டுக் கொண்டிருந்ததோடு, மைய அரசு அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டுவரவும் முயன்று கொண்டிருந்தது.

இதற்கு இணையாக இன்னொருபுறம் குஜராத்திலுள்ள டாங்ஸ் மாவட்டத்தில் கிறித்தவர்கள் மீதும் தேவாலயங்கள் மீதும் தாக்குதலை நடத்தி வந்தது, ஆர்.எஸ்.எஸ்.  இத்தாக்குதலுக்கு அம்மாநில பா.ஜ.க. அரசு துணை நின்றது.  இதே காலகட்டத்தில் ஒரிசாவில் பா.ஜ.க. – பிஜு ஜனதாதள் கூட்டணி ஆட்சிதான் நடைபெற்று வந்தது.  நாடெங்கிலும் கிறித்தவர்களைக் குறிவைத்துத் தாக்குவது என்ற ஆர்.எஸ்.எஸ். திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் ஸ்டெயின்ஸ் பாதிரியாரை உயிரோடு கொளுத்தும் சதித் திட்டம் நிறைவேற்றப்பட்டது.

உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது போல ஸ்டெயின்ஸ் பாதிரியாருக்கு ஒரு பாடம் புகட்டுவது மட்டும்தான் தாரா சிங்கின் நோக்கம் என்றால், அவர் தனது இரு குழந்தைகளோடு தூங்கிக் கொண்டிருக்கும் நேரம் பார்த்து ஜீப்பைக் கொளுத்தியிருக்க வேண்டிய அவசியமே கிடையாது.  அவரை மிரட்டியிருக்கலாம்  ஆனால், தாரா சிங் தலைமையில் வந்த கும்பலோ, மனோகர்பூர் கிராமத்திற்குள் நுழைந்தவுடன், அக்கிராமத்தின் தகவல் தொடர்புகளைத் துண்டித்தனர்.  தீ வைக்கப்பட்ட ஜீப்பில் இருந்து அம்மூவரும் தப்பித்துவிடாதபடி ஜீப்பைச் சுற்றி நின்றுகொண்ட அக்குண்டர்கள், அம்மூவரும் கருகி இறந்தபின்தான் அக்கிராமத்தை விட்டுத் தப்பிச் சென்றனர்.

ஸ்டெயின்ஸ் பாதிரியாரை உயிரோடு கொளுத்திக் கொல்லுவதன் மூலம், ஆர்.எஸ்.எஸ். கும்பல் மதம் மாற்றும் பாதிரியார்கள், மதம் மாறிய பழங்குடியினரை மட்டுமின்றி, நாடெங்கிலும் உள்ள சிறுபான்மை கிறித்தவ சமூகத்தினர் மத்தியில் பாதுகாப்பற்ற அச்ச உணர்வை உருவாக்க முயன்றது என்பதுதான் உண்மை.  இந்தியத் தண்டனைச் சட்டங்களின்படி பயங்கரவாதக் குற்றமாகக் குறிப்பிட்டிருக்க வேண்டிய இக்கொலையை, நீதிபதிகள் சாதாரண கொலை வழக்காக நீர்த்துப் போகச் செய்துவிட்டனர்.

இப்படுகொலை பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட வாத்வா கமிசன், “1991-க்கும் 1998-க்கும் இடைபட்ட காலத்தில் ஒரிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தில் – படுகொலை நடந்த பழங்குடியின மக்கள் வசித்து வரும் மாவட்டம் – குறிப்பிடத்தக்க அளவில் கிறித்தவ மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. இக்காலகட்டத்தில் கிறித்தவ மக்கள் தொகை அதற்கு முந்தைய காலத்தைவிட 575 எண்ணம்தான் அதிகரித்திருக்கிறது.  இது இயற்கையான உயர்வுதான்” எனக் குறிப்பிட்டுள்ளது.  

‘‘பலவந்தமாகவோ, ஆசை காட்டியோ, மதம் மாற்றியோ, மற்ற மதங்களைவிடத் தன் மதம் உயர்ந்தது என்ற கருத்தின் அடிப்படையிலோ மற்றவர்களது நம்பிக்கைகளில் தலையிடுவதை நியாயப்படுத்த முடியாது” என்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர் . 

பாதிரியார் ஸ்டெயின்ஸும் அவரது இரு குழந்தைகளும் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் எரித்துக் கொல்லப்பட்டிருந்தாலும், (குற்றவாளிகளின்) நோக்கம் மதப் பிரச்சாரம் என்ற பெயரில் ஏழை பழங்குடியின மக்களை கிறித்தவ மதத்திற்கு மாற்றிக் கொண்டிருந்த பாதிரியார் ஸ்டெயின்ஸுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்பதுதான்” என்ற வரிகள் வரும் பத்தியைத் தீர்ப்பில் இருந்து நீதிபதிகள் நீக்கிவிட்டனர்.

இதை நீக்கியவுடன்,  ” தாரா சிங்கிற்கு மரண தண்டனை அளிக்கப்படாதது ஏன்?” என்ற கேள்வி வந்துவிடும் என்பதை உணர்ந்திருந்த நீதிபதிகள், “குற்றம் நடந்து 12 ஆண்டுகள் கடந்துவிட்டதால், ஒரிசா உயர் நீதிமன்றம் அளித்த ஆயுள் தண்டனையை அதிகரிக்கத் தேவையில்லை” எனத் தீர்ப்பைத் திருத்தியும் விட்டனர்.

தாரா சிங்கிற்கு அதிகபட்ச தண்டனை அளிக்கக்கூடாது என்பதை மனதில் வைத்துக்கொண்டுதான் நீதிபதிகள் செயல்பட்டிருக்கிறார்கள். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here