மணிரத்னம் படம்… விஜய் சேதுபதி ரசிகர்கள் கவலை வேண்டாம்

0
256
Vijay Sethupathi

மணிரத்னம் படத்தில் விஜய் சேதுபதிக்கு சின்ன வேடம் என்ற ரசிகர்களின் கவலையை மணிரத்னத்தின் ஆழ்வார்பேட்டை அலுவலக வட்டாரம் மறுத்துள்ளது.

மணிரத்னத்தின் புதிய படத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, பகத் பாசில், சிம்பு, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இதில் சிம்புக்கு பிரதான வேடம் என்றும், விஜய் சேதுபதிக்கு சின்ன வேடம் என்றும் கூறப்பட்டது. இது விஜய் சேதுபதி ரசிகர்களை வருத்தமடையச் செய்தது.

ஆனால், விஜய் சேதுபதி வரும் காட்சிகள் படம் முழுவதும் வருவது போல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக மணிரத்னத்தின் அலுவலகத்திலிருந்து செய்தி கசிந்திருக்கிறது. தற்போதைய விஜய் சேதுபதியின் ரசிகர்கள் ஆதரவு மற்றும் வியாபாரத்தை மனதில் வைத்து இந்த மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்: ஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்