மணிரத்னத்தின் புதிய படத்தில் விக்ரம் நடிக்கயிருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் கூறுகின்றன.

மணிரத்னம் அடுத்து பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கயிருப்பதாகவும், விக்ரம், விஜய், ஜெயம் ரவி, எஸ்டிஆர் ஆகியோரை நடிக்க வைக்கயிருப்பதாகவும் உறுதி செய்யப்படாத தகவல் ஒன்று உலவி வந்தது. இந்நிலையில், மணிரத்னத்தின் அடுத்தப் படத்தில் விக்ரம் நடிப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

விக்ரம் கௌதமின் துருவநட்சத்திரம், ராஜேஷ் எம்.செல்வாவின் கடாரம் கொண்டான் படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர மும்மொழிகளில் தயாராகும் மஹாவீர் கர்ணா மற்றும் அஜய் ஞானமுத்து இயக்கும் படம் ஆகியவற்றில் நடிக்க உள்ளார். இந்நிலையில், மணிரத்னம் படத்தில் அவர் நடிப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

மணிரத்னத்தின் அடுத்தப் படம் பொன்னியின் செல்வன் கதையா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்