மணிரத்னம் படத்தில் நடிக்க மாட்டேன் – கடல் ஹீரோ பகீர்

0
238
Gautham Karthik

கடல் மாதிரி ஒரு படத்தை எடுத்தால் யார் மணிரத்னம் படத்தில் நடிப்பார்கள்? கடல் ஹீரோ எடுத்த முடிவு ரொம்ப சரி என்று அவசரகுடுக்கையாக எதுவும் யோசிக்க வேண்டாம். விஷயமே வேறு.

கௌதம் கார்த்திக் நடித்திருக்கும் ரங்கூன் வெற்றிகரமாக ஓடுகிறது. அவரது முதல் வெற்றிப் படம். அடுத்து உடனடியாக இவன் தந்திரன் வெளியாகிறது. அதனை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கௌதம் கார்த்திக்கிடம், உங்கள் அப்பா கார்த்திக் மணிரத்னம் இயக்கத்தில் நடித்த அக்னிநட்சத்திரம் படத்தின் ரீமேக்கில் நடிப்பீர்களா என கேட்கப்பட்டது.

“அப்பா நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற அக்னி நட்சத்திரம் ஒரு தரம் வாய்ந்த படைப்பு. கண்டிப்பாக அதன் ரீமேக்கில் நடிக்க மாட்டேன்” என பதிலளித்தார்.

நிகழ்ச்சியில் கார்த்திக்கின் பங்சுவாலிட்டி குறித்து பேசப்பட்டது. பத்து மணி படப்பிடிப்புக்கு மாலை நாலுமணிக்கு வருகிறவர் கார்த்திக். ஆனால் கௌதம் கார்த்திக் அப்படியில்லை, எல்லோருக்கும் முன்னால் வந்து எல்லோருக்கும் பின்னால் போகிற ஆள் என்று ரங்கூன் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி பாராட்டினார்.

இந்த விஷயத்தில் அப்பாவின் பெயரை மகன் காப்பாற்றாமல் இருப்பதுநல்லது.

இதையும் படியுங்கள்: கவுதமாலாவில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.9ஆக பதிவு

இதையும் படியுங்கள்: மயில் பிரம்மச்சாரி என்ற நீதிபதி

இதையும் படியுங்கள்: டிஎஸ்வி ஹரி: வலிகளைப் பாடிய இதழாளர்

இதையும் படியுங்கள்: ஏன் 6 ஆயிரம் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்கின்றது காக்னிசன்ட்?: நற்றமிழன்

இதையும் படியுங்கள்: பாகுபலி ஏன் முக்கியமான திரைப்படம்? – ஓர் அலசல்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்