மணிரத்னம் படத்திலிருந்து சிம்புவை நீக்க சதி – இயக்குனர் அமீர் புகார்

0
208
Simbu

சிம்புவை படத்திலிருந்து நீக்க வேண்டும் என்று மணிரத்னத்திடம் சிலர் கூறியுள்ளனர், அவரை பழிவாங்க சதி நடக்கிறது என இயக்குனர் அமீர் கூறியுள்ளார்.

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை முடித்துக் கொடுக்காத சிம்பு, எடுத்தவரைக்கும் ரிலீஸ் செய்து கொள்ளுங்கள் என்று கூறியதால் 18 கோடிகள்வரை தனக்கு நஷ்டம் என்று தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் செய்தார். இதற்கு விளக்கம் கேட்டு சிம்புக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிம்புவுக்கு எதிராக சதி நடப்பதாகவும், அவர்மீது தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் காழ்ப்புணர்ச்சியுடன் நடந்து கொள்வதாகவும் இயக்குனர் அமீர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மைக்கேல் ராயப்பன் கூறிய புகாரில் உண்மையிருந்தால் அதனை தீர்க்க நடிகர் சங்கத்துடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்று கூறியிருக்கும் அமீர், நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் சிம்பு விஷால் அணிக்கு எதிராக பேசியதால் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் அவரை பழிவாங்க நினைப்பதாகவும், மணிரத்னம் படத்திலிருந்து சிம்புவை நீக்கும்படி மணிரத்னத்திடம் சிலர் வலியுறுத்தியிருப்பதாகவும் கூறினார். சிம்புவை கேட்டால், அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் ரிலீஸ் நேரம் தனது சம்பளத்தில் 3 கோடிகள் விட்டுக் கொடுத்ததை யாரும் பேசவில்லை என்று கூறியதாகவும் அமீர் கூறினார்.

சிம்பு மணிரத்னத்தின் புதிய படத்தில் நடிக்க உள்ளார். அதன் கம்போஸிங் தற்போது கோவாவில் நடந்து வருகிறது. மேலும், அமீர் இயக்கத்தில் சிம்பு ஒரு படத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள் : ஃபேஸ்புக்குக்கு அடிமையானவரா நீங்கள் ? இதைப் பாருங்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்