மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

மணிரத்னத்தின் புதிய படமான செக்கச் சிவந்த வானத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளனர்.

காற்று வெளியிடை படத்தைத் தொடர்ந்து செக்கச் சிவந்த வானம் படத்தின் படப்பிடிப்பை தொடங்கினார் மணிரத்னம். விஜய் சேதுபதி, சிம்பு, அரவிந்த்சாமி, அருண் விஜய், அதிதி ராவ், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ்ராஜ் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்ய, ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் அகில உலக வெளியீட்டு உரிமையை லைகா வாங்கியுள்ளது. அவர்கள் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் செக்கச் சிவந்த வானம் அக்டோபர் 28 ஆம் தேதி உலக அளவில் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.

செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் முக்கியமான படங்கள் பல வெளியாவதால் சின்னப் படங்களின் வெளியீட்டில் சிக்கல் எழுந்துள்ளது.

#Maniratnam, #Simbu, #VijaySethupathi, #ArvindSwamy, #AishwaryaRajesh

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்