தமிழக மணல் குவாரிகள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவு மீது உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

கடந்தாண்டு நவ.29ஆம் தேதியன்று, புதுக்கோட்டை ஆவுடையார்கோவில் எம்.ஆர்.எம்.ராமையா எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், அனைத்து மணல் குவாரிகளையும் ஆறு மாத காலத்திற்குள் மூட வேண்டும் எனவும், புதிதாக எந்த மணல் குவாரிகளையும் திறக்க கூடாது எனவும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அரசு சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் கல்யாணசுந்தரம் மற்றும் கிருஷ்ணவள்ளி ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழக அரசின் மனுவினைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவினை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவு மீது தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: #OvercomeOckhi: புதிய சொந்தங்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்