மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருக்கும் அரசு அதிகாரிகள் மீது குண்டர் சட்டம்

0
213

மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருக்கும் அரசு அதிகாரிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

மணல் கடத்தல் வழக்கில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பாபு என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அவரது மனைவி
வேதியம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்திருந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சாதராண பொதுமக்கள் மீது இது போன்று பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறன. ஆனால் லஞ்சம் பெற்றுக்கொண்டு இதை அனுமதிக்கும் வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று கேள்வி எழுப்பினர்.

இது தொடர்பாக இன்று தமிழக அரசும், காவல் துறையும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட
நீதிபதிகள், தவறினால் டிஜிபி நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்றும் எச்சரித்தனர்.வழக்கில் லஞ்ச ஒழிப்புத்
துறை சார்பில் 2010-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

மணல் கடத்தலுக்கு துணை போகும் அரசு ஊழியர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சடடத்தில் இடம் இருந்தும் ஒருவர் மீது கூட குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் மணல் கடத்தலுக்கு துணை போகும் அரசு அதிகாரிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

அரசு அதிகாரிகள் மணல் கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்டிருந்தால் அவர்கள் மீது 4 வாரத்தில் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய உள்துறைச் செயலாளர், மற்றும் டிஜிபி ஆகியோர் அனைத்து காவல் நிலையங்கள் மற்றும், விசாரணை ஆணையத்திற்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் மணல் கடத்தல் வழக்கில் பாபு மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தையும் நீதிபதிகள் ரத்து செய்து உத்தரவிட்டனர்.

இதையும் படியுங்கள்: “பாஸ்வேர்டை மாற்றுங்கள்” – பயனர்களுக்கு டிவிட்டர் எச்சரிக்கை

இதையும் படியுங்கள்: #BanSterlite: “மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை மூடிட்டுப் போக வேண்டியதுதானே”

இதையும் படியுங்கள்: மக்களின் வரிப்பணம் 198 கோடி ரூபாய் வீண்; 580 கேள்விகளில் 17 கேள்விகளுக்கு மட்டுமே பதில்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்