மணல் கடத்தலில் ஈடுபட்ட 3,553 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. நெல்லை பேருந்து நிலைய கட்டுமானத்தின் போது நடந்த மணல் கடத்தல் பற்றி எத்தனை வழக்குகள் போடப்பட்டுள்ளன? உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மணல் கடத்தல் தொடர்பாக எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பி இருந்தது. மேலும், இதுகுறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கு, மேலும் நெல்லை மாவட்டத்தில் மட்டும் சுமார் 9 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 244 ஜே.சி.பி. இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மணல் கடத்தலில் ஈடுபட்ட 3,553 டிப்பர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 3,717 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  முன்னதாக சட்ட விரோதமாக மணல் எடுப்பதாகவும் உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை நவம்பர் 4ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here