மணப்பெண் போட்ட கண்டிஷன் : Sorry, ரொம்ப ஓவர்

0
166

தனது திருமணத்திற்கு நுழைவு கட்டணம் செலுத்த வேண்டும் என மணப்பெண் ஒருவர் போட்ட கண்டிஷன் அமெரிக்காவில் விவாதத்திற்குள்ளாகியுள்ளது.

இது தொடர்பான தகவல் மணப்பெண்ணின் 19 வயதான உறவுக்கார மாணவி மூலம் தெரிய வந்துள்ளது. அதன்படி 26 வயதான மணப்பெண், தனது உறவினர்கள் அனைவருக்கும் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் எனது திருமணத்திற்கு வரும் விருந்தினர்கள், 50 டாலர் நுழைவு கட்டணம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.

இந்த செய்தியை பார்த்த அவரது உறவுக்கார பெண்ணான 19 வயதான கல்லூரி மாணவி அதிர்ச்சியடைந்துள்ளார். என்ன இது புது பழக்கமா இருக்கே என மணப்பெண்ணிடம் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு 50 டாலர் நுழைவு கட்டணம் கட்டாயம். Venmo ( மொபைல் கட்டண சேவை) மூலம் நீ 50 டாலர் முன்பணமாக எனக்கு கொடுத்துவிட்டால், கல்யாண தினத்தன்று நுழைவு கட்டணம் செலுத்த நீ வரிசையில் நிற்க வேண்டாம், உன்னை Exclusive Guest List-ல் சேர்த்து விடுகிறேன் என பதில் அனுப்பியுள்ளார்.

இந்த பதிலை கண்டு கோபமுற்ற அந்த கல்லூரி மாணவி, உன் திருமணத்திற்கு வர நாங்கள் ஏன் நுழைவு கட்டணம் செலுத்த வேண்டும் என கேள்வி கேட்டு துளைத்தெடுத்தார். அதற்கு எனது திருமண நாள் அன்று நான் செய்யும் செலவுகளை எப்படியாவது ஈடுகட்ட நினைக்கிறேன். அதற்காக தான் இந்த ஏற்பாடு என கூறியதால், கடுப்பான அந்த 19 வயது உறவுக்கார பெண், எனக்கு உன் திருமணத்திற்கு வர விருப்பம் இல்லை என கூறி பேச்சை துண்டித்து விட்டார்.

இந்த சம்பவம் குறித்து மேலும் கூறியுள்ள மாணவி, எனக்கு கடன் தொல்லை இல்லை. ஆனாலும் நான் பெரிய பணக்கார வீட்டு பெண் அல்ல, கேட்டவுடன் தூக்கி பணத்தை வாரி இறைக்க என தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தை ரெடிட் என்ற அமெரிக்க சமூக செய்தி மற்றும் விவாத வலைத்தளத்தில் அந்த மாணவி பதிவிட்டுள்ளார்.

இதற்கு பதில் அளித்துள்ள பலரும் மணப்பெண்ணை விமர்சித்துள்ளனர். 50 டாலருக்கு ஆசைப்பட்டு அதைவிட அதிகம் பரிசு தர நினைக்கும் விருந்தினர்களை மணப்பெண் இழக்க போகிறார் என கூறியுள்ளனர்.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here