மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கும் போட்டியில் மோட்டோரோலா நிறுவனம் தற்போது இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மோட்டோரோலாவின் மடிக்கக் கூடிய ஸ்மார்ட்போன் கான்செப்ட் வெளியாகி இருக்கும் நிலையில், தற்சமயம் மென்பொருள் பற்றிய விவரங்கள் வெளிவந்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் திறக்கப்பட்டிருக்கும் நிலையில் ஸ்மார்ட்போனின் இரண்டாவது டிஸ்ப்ளேவை கொண்டு தரவுகளை ஸ்கிரால் செய்து கொள்ளலாம். மேலும் முதற்கட்டமாக இரண்டாவது டிஸ்ப்ளேவில் குறிப்பிட்ட சில ஆப் மட்டும் இயக்குவதற்கான வசதியை மோட்டோரோலா வழங்கும் என தெரிகிறது.

மோட்டோரோலாவின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் முழுமையான ஆண்ட்ராய்டு அனுபவத்தை வழங்காது என தெரியவருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் இரண்டாவது டிஸ்ப்ளேவில் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்ட சிஸ்டம் ஆப்-களை மட்டுமே டிஸ்ப்ளே செய்யும் என கூறப்படுகிறது.

ஸ்மார்ட்போன் மடிக்கப்பட்ட நிலையில் இரண்டாவது டிஸ்ப்ளேவின் மூலம் மோட்டோ டிஸ்ப்ளே, மோட்டோ ஆக்ஷன்ஸ் மற்றும் மோட்டோ கேமரா உள்ளிட்டவற்றையே இயக்க முடியும் என கூறப்படுகிறது. மேலும் ஸ்மார்ட்போனின் இரண்டாவது டிஸ்ப்ளே டிராக்பேட் போன்றும் இயங்கும் என தெரிகிறது.இதை கொண்டு க்ரோம் பிரவுசிங் செய்ய முடியும் என கூறப்படுகிறது.

கூடுதலாக இந்த டிஸ்ப்ளேவில் அதிகபட்சம் ஆறு க்விக் செட்டிங்களை காண்பிக்கும் என்றும் இவை டைல் வடிவில் இடம்பெற்றிருக்கும் என தெரிகிறது. எனினும், இதை ஸ்கிரால் செய்து பார்க்க முடியுமா என்பது குறித்து தகவல் இதுவரை இல்லை.

மெயின் டிஸ்ப்ளே மற்றும் இரண்டாவது டிஸ்ப்ளேக்களில் வெவ்வேறு வால்பேப்பர்களை வைத்துக் கொள்ள மோட்டோரோலா புதிய அம்சத்தை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் வேறு சில அம்சங்களை வழங்குவதற்கான சோதனைகளில் மோட்டோரோலா ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here