ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் விவகாரத்தில், பேச்சுவார்த்தைகளின் மூலமே ஆக்கப்பூர்வமான தீர்வை எட்ட முடியும் என்று சீனா தெரிவித்துள்ளது.

ஏற்கனவே அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள், ஜெய்ஷ் இ முகமது இயக்க தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கக்கோரி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வந்துள்ளன.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் புதன்கிழமை (மார்ச் 13), மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க கோரும் தீர்மானத்தை, பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், இதுபோன்ற ஒரு கருத்தைச் சீனா தெரிவித்துள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க ஏற்கெனவே மூன்று முறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், சீனாவின் முட்டுக்கட்டையால், அந்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. தற்போது கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தின் மீதான நிலைப்பாட்டை சீனா இன்னும் அறிவிக்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here