ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை ஐ.நா சபை மூலம் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க முயற்சி எடுக்கப்பட்டது. இந்த முயற்சிக்கு சீனா மீண்டும் முட்டுக்கட்டை போட்டுள்ளது.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் அங்கம் வகிக்கும் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள், மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக பட்டியலிட நடவடிக்கை எடுத்துள்ளது. அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் சீனா எந்தவித முடிவும் எடுக்கவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்கா, ‘சீனா இப்படி நடந்து கொண்டால், வேறு வழிகளை கையாள வேண்டியிருக்கும். சீனா, பாகிஸ்தானில் இருக்கும் அல்லது வேறு நாடுகளில் இருக்கும் தீவிரவாதிகளை காப்பாற்ற பார்க்கக் கூடாது’ என்று கறாரான கருத்தைப் பதிவு செய்துள்ளது.

மேலும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இருக்கும் அமெரிக்க அதிகாரி இது குறித்துப் பேசிய போது, ‘இப்படி சீனா மசூத் அசாரை காப்பாற்ரும் வகையில் செயல்படுவது நான்காவது முறையாகும். பாதுகாப்பு கவுன்சில் செய்ய வேண்டிய பணிகளை தடுக்கும் வகையில் சீனா நடந்து கொள்ளக் கூடாது. தொடர்ந்து சீனா இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால், பாதுகாப்பு கவுன்சிலில் இருக்கும் நாடுகள் வேறு வழிகளை கையாள வேண்டியிருக்கும். அதற்கு அவசியம் இருக்காது என நம்புகிறேன்’ என்று கடுமையாக எச்சரிக்கும் தொனியில் கூறியுள்ளார்.

சீனாவின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா கடும் அதிருப்தி தெரிவித்தும் பிற நாடுகளின் முயற்சிகளை பாராட்டியும் உள்ளது.

மேலும் மசூத் அசாருக்கு எதிராக உலக நாடுகள் பல ஐ.நா சபையில் போர்க் கொடி தூக்கியுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. மசூத் அசார், சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டால் அவரின் சொத்துகள் முடக்கப்படும். மேலும், ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்குப் பயணம் செய்யவும் அவருக்குத் தடை விதிக்கப்படும்.

மசூத் அசாருக்கு எதிராக, ஐ.நா சபையில் 2016 ஏப்ரல் மாதமும் கொண்டுவரப்பட்ட இதுபோல் ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போதும் சீனா, அந்த நடவடிக்கைக்கு முட்டுக்கட்டைப் போட்டது.

[orc]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here