நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் துப்பாக்கிகள் மற்றும் தானியங்கி ஆயுதங்களுக்கு உடனடி தடையை விதித்துள்ளார். கிறிஸ்ட்சர்ச் மசூதி தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டதையடுத்து இந்த தடையை அறிமுகம் செய்துள்ளார்.
“சட்டம் அமலாவதற்கு முன்பு உடனடியாக அதிக ஆயுதங்களை வாங்குவதும் தடுக்கப்படும். இப்போது இருந்தே தடை அமலுக்கு வரும்” என்று கூறினார்.

“இந்த நடவடிக்கையால் யாரும் ஆயுதங்களை வாங்கும் அனுமதியை போலீஸிடமிருந்து பெற முடியாது. அவர்கள் வாங்குவதற்கான தேவையுமில்லை” என்றார்

மேலும், “அதிக குண்டுகள் கொண்ட ஆயுதங்கள், வேகமாக இயங்கும் ஆயுதங்களுக்கும் தடை” என்று குறிப்பிட்டார்.

மசூதி தாக்குதலில் பாதி தானியங்கி ஆயதம் பயன்படுத்தப்பட்டதையும் சுட்டிகாட்டினார்.

அதுமட்டுமின்றி தற்போது துப்பாக்கி வைத்திருபவர்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும். அவர்கள் அரசிடம் துப்பாக்கியை 69லிருந்து 139 அமெரிக்க டாலருக்கு திரும்ப அளிக்கலாம். ஆனால் திரும்ப அளிப்பது கட்டாயம் என்றார்.

அதனை மீறி துப்பாக்கி வைத்திருந்தால் 4000 அமெரிக்க டாலர் அபராதம் மற்றும் 3 ஆண்டு சிறை தண்டனை என்றும் ஆர்டன் கூறியுள்ளார்.

இந்த சட்டத்துக்கு நியூசிலாந்தில் பெரிய வரவேற்பு கண்டிப்பாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here