சோளத்தை நாம் அதிகம் உண்பதால் நமக்கு கிடைக்கின்ற பல்வேறு விதமான நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மூலம், மலச்சிக்கல் தீர 

நமது உடலின் தினசரி நார்ச்சத்து தேவையை முழுமையாக கொண்ட பயிர் தானியமாக சோளம் இருக்கிறது. சோளத்தை பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிடுவதால் நார்ச்சத்து நமக்கு முழுமையாக கிடைக்கின்றது. இந்த நார்ச்சத்து மூல நோய் ஏற்படாமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சாப்பிடும் உணவுகள் கழிவுகளாக மாறும் போது அவை நீர் வற்றி இறுக்கிக் கொள்வதை தடுத்து சுலபமாக மலம் வெளியேறுவதை உறுதி செய்கிறது. சோளத்தில் இருக்கும் இந்த நார்ச்சத்து குடல், வயிறு புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. வயிற்றில் செரிமான அமிலங்கள் சுரப்பை சரி செய்து உண்ணும் உணவுகள் நன்றாக ஜீரணம் ஆக வழிவகை செய்கிறது.

தயாமின், நியாசின் சத்துகள்

சோளத்தில் வைட்டமின் பி சத்துக்கள் அதிகமிருக்கின்றன. அதிலும் குறிப்பாக தயாமின் மற்றும் நியாசின் ஊட்டச்சத்துக்கள் இந்த சோளத்தில் இருக்கின்றன. தயாமின் சத்து உடலில் நரம்பு மண்டலங்கள் சீராக இயங்க உதவும். அடிக்கடி வயிற்றுப் போக்கு ஏற்படுவது, ஞாபக மறதி நிலை மற்றும் தோல் சம்பந்தமான வியாதிகள் ஒன்று சேர்ந்து ஏற்படுவதை பெல்லாக்ரா என அழைக்கின்றனர். இந்தப் பெல்லாக்ரா குறைபாடு உடலில் நியாசின் சத்து குறைபாட்டால் ஏற்படுகின்றது. சோளம் தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு தயமின் மற்றும் நியாசின் சத்துக்கள் கிடைக்க பெற்று மேற்கூறிய குறைபாடுகள் நீங்கி உடலை வலுப்படுத்தி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

கர்ப்பிணி பெண்கள்

மற்ற ஊட்டச்சத்துக்களை போல ஃபோலிக் ஆசிட் எனப்படும் போலிக் அமிலமும் மனிதர்களின் உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாத சத்தாக இருக்கிறது. இந்த போலிக் அமிலம் குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களுக்கு குறைவாக இருக்கும் பட்சத்தில், அவர்களுக்குப் பிறக்கின்ற குழந்தைகள் சராசரி எடைக்கும் குறைவாக பிறக்கும் நிலை உண்டாகிறது. கருவுற்ற பெண்கள் மருத்துவர் அறிவுறுத்திய அளவின்படி சோளம் சாப்பிட்டு வருவது அவர்களுக்கும், அவர்களின் வயிற்றில் வளரும் குழந்தையின் சீரான வளர்ச்சிக்கும் பெருமளவு உதவுகிறது.

உடல் எடை கூட

கலோரி சத்துக்கள் நிறைந்த ஒரு இயற்கை உணவுப் பொருளாக சோளம் இருக்கிறது. 100 கிராம் சோளத்தில் 365 கலோரிச் சத்துக்கள் இருக்கின்றது. எனவே தான் இந்த சோளத்தில் இருக்கின்ற மஞ்சள் மற்றும் வெள்ளை நிறப் பொருட்கள் விரைவில் உடல் எடை கூடுவதற்கு உதவுகிறது. சராசரி உடல் எடைக்கு குறைவாக இருப்பவர்கள் சோளத்தை அடிக்கடி சாப்பிட்டு வருவதால் கூடிய விரைவில் திடகாத்திரமான எடையை பெற முடியும்.

தாதுக்கள்

சோளத்தில் எண்ணற்ற தாது பொருட்கள் இருக்கின்றன. சோளத்தில் பாஸ்பரஸ், மக்னீசியம், மாங்கனீஸ், துத்தநாகம், இரும்புச்சத்து, செம்புச் சத்து போன்ற பல வகையான உடலுக்கு அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்திருக்கின்றன. இவற்றோடு மற்ற உணவு வகைகளில் காணக்கிடைக்காத வேதிப் பொருளான செலினியம் தாதுப்பொருளும் சோளத்தில் நிறைந்திருக்கிறது. இதில் பாஸ்பரஸ் சத்து உடலின் எலும்புகளின் வளர்ச்சி மற்றும் சிறுநீரகங்களின் சீரான செயல்பாட்டிற்கு உதவுகிறது. மக்னீசியம் சத்து இதயத்தின் துடிப்பை உறுதி செய்வதோடு, எலும்புகளின் அடர்த்தி மற்றும் உறுதித்தன்மையை அதிகப்படுத்துகிறது.

இதயம் நலம்

சோளத்தை பச்சையாக சாப்பிடுவதாலும், சோளத்திலிருந்து பெறப்படும் சோள எண்ணெய்யை உணவு பயன்பாட்டிற்கு உபயோகிப்பதாலும் இதய நலம் காக்கபடுவதாக பல மருத்துவ ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதில் இருக்கும் ஒமேகா – 3 கொழுப்பு அமிலங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கெட்ட கொலஸ்ட்ரால் சத்துக்களை குறைத்து ரத்த நாளங்கள் நரம்புகள் மற்றும் இதயத்திற்கு செல்லக்கூடிய நரம்புகள் போன்றவற்றில் கொழுப்புகள் படிந்து விடாமல் தடுத்து, சீரான ரத்த ஓட்டம் செல்வதை உறுதி செய்து இதய பாதிப்புகள் ஏற்படாமல் காக்கிறது.

ரத்த சோகை நீங்க

பரம்பரை காரணம் மட்டுமல்லாமல் உடலில் வைட்டமின் மற்றும் தாதுக்கள் குறைபாட்டாலும் ரத்தசோகை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாகிறது. இரும்புச்சத்து அதிகம் உள்ள சோளத்தை பச்சையாகவோ அல்லது பக்குவம் செய்தோ சாப்பிட்டு வருபவர்களின் உடலில் சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தி அதிகரித்து, இரத்த சோகை குறைபாடு விரைவில் நீங்குவதாக பல முறை மருத்துவர்கள் நடத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

கண்கள் நலம்

சோளத்தில் உள்ள பீட்டா கரோட்டின் எனப்படும் சத்து அதிகமுள்ளது. இந்த பீட்டா கரோட்டின் மனிதர்களின் கண் பார்வைத்திறன் தெளிவாகவும் கூர்மையாகவும் இருப்பதற்கு மிகவும் உதவுகிறது. குறிப்பாக 40 வயதை கடந்த பலருக்கும் கண்களில் கண்புரை குறைபாடு ஏற்படுவதை பெருமளவு குறைக்கும் சக்தி சோளத்தில் இருக்கும் பீட்டா கரோட்டின் கொண்டுள்ளது. கண்களின் செல்களின் வளர்ச்சியை ஊக்குவித்து கண்பார்வை கெடாமல் பாதுகாக்கவும் சோளத்தில் இருக்கின்ற பீட்டா கரோட்டின் சத்துக்கள் உதவுகிறது.

நீரிழிவு பிரச்சனை குறைய

சமீப காலங்களில் உலகில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அபாயகரமான அளவில் அதிகரித்து வருகிறது. பரம்பரை காரணமும் மற்றும் சரியான உணவுப் பழக்கம் இல்லாததும் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கு பிரதான காரணங்களாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இன்சுலின் ஹார்மோன் ஊசி போட்டுக்கொள்ள அவசியம் இல்லாத நிலையில் இருக்கும் நீரிழிவு நோயாளிகள் தொடர்ந்து சாப்பிட்டு வந்ததில் அவர்களின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக இருந்ததை ஆய்வுகளில் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த சோளத்தில் பைட்டோகெமிக்கல் எனப்படும் வேதிப்பொருள் நிறைந்திருக்கிறது. பைட்டோ கெமிக்கல் உடலில் இயற்கையாக உற்பத்தியாகும் இன்சுலின் ஹார்மோன் சுரப்பை சீராக வைத்து, நோயாளிகளுக்கு ரத்தத்தில் திடீரென சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் ஆபத்தான நிலையை தடுக்கிறது.

முக அழகு

சோளத்தில் நார்ச்சத்து அதிகமிருப்பதால் இதை சாப்பிட்டு வருபவர்களுக்கு தோலில் ஈரப்பததன்மை காக்கப்படுவதோடு, சுருக்கங்கள் ஏற்படுவதை தாமதிக்கிறது. சோள மாவை தண்ணீர் அல்லது சிறிது பால் கலந்து நன்றாக முகத்தில் பூசி கொண்டு, சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவி வர முகப்பரு தழும்புகள் எண்ணெய் வழிதல் போன்ற குறைபாடுகள் நீங்கி பளபளப்பான முக தோற்றத்தை தருகிறது. எனவே தான் பெரும்பாலான முக அழகு சாதனப் பொருட்கள் பலவற்றிலும் சோளம் சார்ந்த பொருட்கள் அதிக அளவு உபயோகிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here