மக்கள் விரோத பாஜக அரசுக்கு எதிராக தீவிர போராட்டம்: டி.கே.சிவக்குமார்

0
158

கர்நாடகத்தில் பா.ஜ.க அரசுக்கு எதிராக காங்கிரஸ் தீவிர போராட்டம் நடத்தும் என்று டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

பெங்களூருவில் பல்வேறு அமைப்புகள் சார்பில் இந்தியாவை பாதுகாப்போம் என்ற பெயரில் நடைபெற்று வரும் போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டார். பின்னர் அந்த போராட்டத்தில் டி.கே.சிவக்குமார் பேசியதாவது:-

நாட்டை பாதுகாக்க அனைத்து அமைப்புகளும் ஒன்று சேர்ந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தொழிலாளர்கள் அமைப்புகளும் போராட்ட களத்தில் குதித்திருப்பதை வரவேற்கிறேன். கர்நாடகத்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி மக்கள் மிகுந்த சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். மக்களிடம் பணம் இல்லை. ஆயிரக்கணக்கானோர் வேலையை இழந்துள்ளனர்.

இந்த சூழ்நிலையிலும் கொரோனா உபகரணங்கள் வாங்கியதில் பல கோடி ரூபாயை அரசு ஊழல் செய்திருக்கிறது. விவசாயிகளுக்கு எதிராக நிலச்சீர்திருத்த சட்ட திருத்தம், ஏ.பி.எம்.சி.யில்சட்ட திருத்தம் செய்திருக்கிறது. இதன் காரணமாக விவசாயிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு மக்கள் விரோத ஆட்சியை நடத்துகிறது. ஏழை- எளிய மக்கள் பாதிக்கப்படுகின்றனர். விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அரசுக்கு எதிராக காங்கிரஸ் தீவிர போராட்டம் நடத்தும். மக்கள் விரோத அரசுக்கு எதிராக ஒவ்வொரு தாலுகாவில் போராட்டம் நடத்தப்படும். விவசாயிகள், மற்ற அமைப்புகளுடன் சேர்ந்து போராடவும் காங்கிரஸ் தயாராக உள்ளது என்றார்.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here