இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. இதையடுத்து, ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று குறைந்ததையடுயத்து, கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்ட நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் கொரோனா இரண்டாவது அலை தீவிரம் அடைந்தது. நாள்தோறும் பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டது.

ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இதனால், மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்தது. இதையடுத்து, கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியது.

இதனிடையே, கொரோனா மூன்றாவது அலை தொடர்பான எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன. உலகின் பல நாடுகளில் மூன்றாவது அலை ஏற்கனவே எட்டி பார்த்து விட்ட நிலையில், இந்தியாவில் எந்த நேரமும் தாக்கக்கூடும் என்ற எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. அதேசமயம், உலக நாடுகளும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு பயணக் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளன. பிற நாடுகளில் இருந்து தங்கள் நாட்டுக்கு வருவோருக்கு கொரோனா பரிசோதனை சான்றிதழ் உள்ளிட்டவைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

அதேபோல், வெளிநாடு சென்று இந்தியா திரும்புவோருக்கும், இந்தியாவில் இருந்து வெளிநாடு செல்வோருக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், கொரோனாவுக்கான தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், அமெரிக்கா சென்று திரும்பிய மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்த தகவலை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி படுத்தியுள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்.” என்று கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here