மக்கள் நீதி மய்யத்தில் யாரும் நிரந்தர முதல்வராக இருக்க மாட்டார்கள் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மதுரை ஒத்தக்கடையில் புதன்கிழமை (இன்று) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். கட்சியின் கொடியையும் அவர் அறிமுகப்படுத்தினார். இதன் பின்னர் தனது ஆதரவாளர்கள் மத்தியில் அவர் பேசினார். அப்போது பேசிய அவர், மக்கள் நீதி மய்யத்தில் யாரும் நிரந்தர முதல்வராக இருக்க மாட்டார்கள் என்றார். மக்களையும் நீதியையும் மய்யமாக வைத்து தொடங்கப்பட்ட கட்சி இது என்றார்.

1. சாதி, மதத்தின் பெயரால் நடைபெறும் விளையாட்டுகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.

2. ஆட்சிக்கு வந்தால் இலவசங்கள் இருக்காது என்றார். குவார்ட்டருக்கும், ஸ்கூட்டருக்கும் பதிலாக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்றார்.

3. கல்வியைத் தனியாரிடம் கொடுத்துவிட்டு மது வியாபாரத்தை அரசு நடத்துவது வாடிக்கையாகி விட்டதாகக் குற்றம் சாட்டிய அவர், தரமான கல்வி எல்லா தரப்பினருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்றார்.

4. எல்லா நல்ல முதல்வர்களுக்கும் இருக்கும் கொள்கைகள்தான் மக்கள் நீதி மய்யத்திற்கும் இருப்பதாகத் தெரிவித்தார்.

5. தனி மரம் தோப்பாகாது என்பதால் அனைவரும் இணைந்து ஊழலை ஒழிக்க வேண்டும் என்றார்.

6. எட்டு கிராமங்களைத் தேர்ந்தெடுத்துள்ளதாகவும், அந்த கிராமங்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்போம் என்றும் தெரிவித்தார்.

7. கட்சிக் கொடியிலுள்ள ஆறு கைகளும் தென்னிந்தியாவின் ஆறு மாநிலங்களைக் குறிக்கும் என்றும், நடுவில் இருக்கும் நட்சத்திரம் மக்களைக் குறிக்கும் என்றும் தெரிவித்தார்.

8. இடதுசாரியா, வலதுசாரியா என கேள்வி கேட்கிறார்கள் என்றும், அதனால்தான் தனது கட்சிக்கு மய்யம் என பெயர் வைத்ததாகவும் தெரிவித்தார்.

9. பேச்சு வழக்கில் தமிழ் இருந்தால், தமிழ் வாழும் என்றார்.

10. திமுக, அதிமுக, பாஜக போன்ற கட்சிகளின் விமர்சனத்திற்கு பதில் அளிப்பதைவிட, வேலையைப் பார்க்கலாம் என்றார்.

இதையும் படியுங்கள்: குஜராத் படுகொலை பிரதான நாயகனின் முகமூடியைக் கிழிக்க நெருப்பாற்றில் நீந்தும் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியின் போராட்டம்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here