மக்கள் தொகை ; 2027 இல் சீனாவை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடிக்கும் இந்தியா-ஐநா

India to cross China's population by 2027: United Nations

0
93

India to cross China’s population by 2027: United Nations

2050ஆம் ஆண்டு பூமியில்  வாழ்பவர்களின் எண்ணிக்கை சுமார் 950 கோடியாக (950,00,00,000) இருக்கும். 2100ஆம் ஆண்டில் இதுவே 1100 கோடியாக இருக்கும். (1100,00,00,000)

இந்த எண்ணிக்கையில் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே செல்லும்பட்சத்தில் 2027ம் ஆண்டு மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் சீனாவை இந்தியா பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

2019-ஆம் ஆண்டில் இருந்து 2050-ஆம் ஆண்டு வரையில் இந்தியாவின் மக்கள் தொகை 27.3 கோடி அதிகரிக்கும். இந்த நூற்றாண்டின் இறுதியில் உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா இருக்கும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், சீனாவின் மக்கள் தொகை 2019 முதல் 2050ஆம் ஆண்டுக்கு இடையே 3.14 கோடி அதாவது 2.2 சதவீதம் குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக மக்கள் தொகை கண்ணோட்டம்” என்ற தலைப்பில் இந்த அறிக்கையை ஐநாவின் பொருளாதார மற்றும் சமூக விவகாரத்துறை வெளியிட்டது: அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

உலகின் மக்கள்தொகை அடுத்த 30 ஆண்டுகளில் 200 கோடி அதிகரிக்கும், அதாவது தற்போது 770 கோடி மக்கள் தொகை இருக்கும் நிலையில், 2050ஆம் ஆண்டில் 970 கோடியாக அதிகரிக்கும். இந்த நூற்றாண்டின் இறுதியில் உலகின் மக்கள் தொகைப் பெருக்கம் உச்ச கட்டத்தை அடைந்து, 1100 கோடியாக அதிகரிக்கும்.

2050ம் ஆண்டுவரை உலகின் மக்கள் தொகை உயர்வதற்கு 9 நாடுகள் முக்கியக் காரணமாக இருக்கின்றன. குறிப்பாக இந்தியா முதலாவதாகவும், அதைத் தொடர்ந்து நைஜீரியா, பாகிஸ்தான், காங்கோ, எத்தியோப்பியா, தான்சானியா, இந்தோனேசியா, எகிப்து, மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன.

இந்தியா மற்றும் சீனாவின் மக்கள் தொகை மட்டும் 2050ம் ஆண்டில் கணக்கில் எடுக்கும்போது உலக மக்கள் தொகையில் 23 சதவீதத்தைக் கொண்டிருக்கும்.

முன்னதாக 2022-ம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை சீனாவை முறியடிக்கும் என்று ஐ.நா. 2 ஆண்டுகளுக்கு முன் கணித்திருந்தது. ஆனால், இப்போது தனது கணிப்பை திருத்தியுள்ளது.

மேலும், உலக அளவில் இந்தியா, இந்தோனேசியா, பாகிஸ்தான், மெக்சிகோ, பிலிப்பைன்ஸ், எகிப்து ஆகிய நாடுகளில் பெண்களின் சராசரியாக 2  குழந்தை பெற்றுக்கொள்பவர்களாக இருப்பார்கள்.

அப்போது இந்தியாவில் இருக்கும் மக்கள் தொகை, அமெரிக்காவின் மக்கள் தொகையைக் காட்டிலும் 10 மடங்கு அதிகமாக இருக்கும் என்று ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட மக்கள் தொகை அறிக்கையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் கணிக்கப்பட்டதை விட, மக்கள் தொகை வளர்ச்சி என்பது சற்று வேகம் குறைவாகவே இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

தற்போதிருக்கும் 770 கோடி மக்கள் தொகை என்பது, அடுத்த 30 ஆண்டுகளில் 950 கோடியாக அதிகரிக்கும் .  அதிநவீன மருத்துவ சிகிச்சை, மருத்துவம், புதிய மருந்துகள் கண்டுபிடிப்பு போன்றவற்றால், மக்களின் வாழ்நாள் அதிகரித்து, முதியோரின் வாழ்நாள் அதிகரித்து, எண்ணிக்கை அதிகரிக்கும். மேலும், பல்வேறு நாடுகளில் குழந்தை பெற்றுக்கொள்ளும் அளவு குறையும், மக்கள் தொகையை குறைக்கவும் சில நாடுகள் முயற்சி எடுக்கும்.

2050ஆம் ஆண்டில் உலகில் உள்ள 6 மக்களில் ஒருவர் அதாவது 16 சதவீதம் பேர் 65 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பார்கள். தற்போது 11  பேரில் ஒருவராக அதாவது 9 சதவீதம் இருப்பது 16 சதவீதமாக அதிகரிக்கும். 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தற்போது உலகில் 14.303 கோடி இருக்கும் நிலையில் இது மூன்று மடங்கு அதிகரித்து 42.60 கோடியாக 2050ம் ஆண்டு அதிகரிக்கும்.

உலக அளவில் குழந்தை பெறும்வீதம் பெண்களுக்கு கடந்த 1990களில் 3.2 ஆக இருந்தது, 2019ம் ஆண்டில் 2.5 சதவீதமாக இருந்தது. இது மேலும் 2050ஆம் ஆண்டில் 2.2 சதவீதமாகக் குறையும். அதாவது பெண் ஒருவர் சராசரியாக 2 குழந்தைகள் மட்டுமே பெற்றுக்கொள்வார்.

உலகில் வாழும் மக்களின் சராசரி வாழ்நாள் 72.6 ஆக இருக்கும் நிலையில், இது 2050ம் ஆண்டில் 77.1 ஆக அதிகரிக்கும்.


 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here